4-வது போட்டியிலும் அபார வெற்றி: ஷபாலி வர்மா, ஸ்மிருதிக்கு பாராட்டு

0
21

இலங்​கைக்கு எதி​ரான 4-வது சர்​வ​தேச டி20 கிரிக்​கெட் போட்​டி​யில் சிறப்​பாக விளை​யாடிய இந்​திய அணி வீராங்​க​னை​கள் ஸ்மிருதி மந்​த​னா, ஷபாலி வர்மா ஆகியோ​ருக்கு கேப்​டன் ஹர்​மன்​பிரீத் கவுர் பாராட்டு தெரி​வித்​துள்​ளார்.

இலங்கை மகளிர் அணி இந்​தி​யா​வில் சுற்​றுப்​பயணம் செய்து 5 போட்​டிகள் கொண்ட டி20 தொடரில் விளை​யாடி வரு​கிறது. முதல் 3 போட்​டிகளில் இந்​திய அணி வெற்றி பெற்று தொடரைக் கைப்​பற்​றியது. இந்​நிலை​யில் நேற்று முன்​தினம் 4-வது டி20 போட்டி திரு​வனந்​த​புரம் மைதானத்​தில் நடை​பெற்​றது. இதில் முதலில் விளை​யாடிய இந்​திய அணி 20 ஓவர்​களில் 2 விக்​கெட் இழப்​புக்கு 221 ரன்​கள் குவித்​தது.

ஸ்மிருதி மந்​தனா 80, ஷபாலி வர்மா 79, ரிச்சா கோஷ் 40, ஹர்​மன்​பிரீத் கவுர் 16 ரன்​கள் குவித்​தனர். பின்​னர் 222 ரன்​கள் என்ற வெற்றி இலக்​குடன் விளை​யாடிய இலங்கை அணி 20 ஓவர்​களில் 6 விக்​கெட் இழப்​புக்கு 191 ரன்​கள் மட்​டுமே குவித்​தது. இதையடுத்து இந்​திய அணி 30 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி கண்​டது.

வெற்றி குறித்து இந்​திய அணி​யின் கேப்​டன் ஹர்​மன் ​பிரீத் கவுர் கூறிய​தாவது: இலங்கை வீராங்​க​னை​கள் அபார​மாக விளை​யாடினர். ஆனால், அருந்​ததி ராய், வைஷ்ணவி சர்​மா, ஸ்ரீசரணி ஆகியோர் சிறப்​பாக பந்​து​வீசி அவர்​களைக் கட்​டுப்​படுத்​தினர். பேட்​டிங்​கில் ஸ்மிருதி மந்​த​னா​வும், ஷபாலி வர்​மா​வும் அதிடி​யாக விளை​யாடினர். அவர்​களது அதிரடி ஆட்​டம் வெற்​றிக்கு உதவியது. அவர்​களுக்கு எனது பாராட்​டு​கள். கடைசி மற்​றும் 5-வது ஆட்டத்திலும் வெற்​றியைக் குவிக்க முயல்​வோம். இவ்​வாறு அவர் கூறி​னார்.

சிறந்த ஆட்​டக்​காரர் விருது பெற்ற ஸ்மிருதி மந்​தனா கூறும்​போது, “இந்த ஆட்​டத்​தில் அதிக ரன்​கள் குவிக்​க வேண்​டும் என்று விரும்​பினேன். இதற்​காக கூடு​தலாக பயிற்சி எடுத்​தேன். இதனால் 4-வது போட்​டி​யில் அதிக ரன்​கள் குவிக்க முடிந்​தது” என்​றார்.

8 முறை விருது: நேற்​றைய போட்​டி​யில் ஆட்​ட​நாயகி விருதை ஸ்மிருதி வென்​றார். இதன்​மூலம் டி20 போட்​டிகளில் ஆட்​ட​நாயகி விருதை 8-வது முறை​யாக வென்​றுள்​ளார் ஸ்மிருதி மந்​த​னா. அதிக ஆட்​ட​ நாயகி விருதுகளை வென்ற இந்​திய வீராங்​க​னை​கள் வரிசை​யில் 12 விருதுகளு​டன் மிதாலி ராஜ் முதலிடத்​தி​லும், 11 விருதுகளு​டன் ஹர்​மன் ​பிரீத் கவுர் 2-வது இடத்​தி​லும், 8 விருதுகளுடன் ஷபாலி வர்மா 3-வது இடத்​தி​லும் உள்​ளனர்​. ஷபாலி வர்​மாவுடன்​ ஸ்மிரு​தி மந்​த​னா 3-வது இடத்​தை பகிர்ந்​து​கொண்​டுள்​ளார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here