பணியின்போது ஓட்டுநர்கள் செல்போன் பயன்படுத்த கூடாது: மாநகர் போக்குவரத்து கழகம் உத்தரவு

0
18

பணி​யின்​போது ஓட்டுநர்கள் செல்​போன் பயன்​படுத்​தக் கூடாது என மாநகர் போக்​கு​வரத்து கழகம் உத்​தர​விட்​டுள்​ளது.

இதுகுறித்து அனைத்து கிளை மேலா​ளர்​களுக்கு அனுப்​பப்​பட்ட சுற்​றறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழ்​நாடு அரசு போக்​கு​வரத்​துக் கழகத்​தில் கடந்த சில நாட்​களாக அதிக அளவில் விபத்​துக்​கள் மற்​றும் உயி​ரிழப்பு விபத்​துகள் ஏற்​பட்டு வரு​கின்றன.

இதுகுறித்து ஆய்வு செய்​யப்​பட்​டது. சில ஓட்டுநர்கள் செல்​போன் பேசிக் கொண்டே பேருந்தை இயக்​கு​வது பொது​மக்​களின் புகார் மற்​றும் பேருந்​தின் சிசிடிவி கேமரா மூலம் கண்​டறியப்​படு​கிறது.

இவ்​வாறு ஓட்டுநர்கள் செல்​போன் பேசிக் கொண்டே பேருந்தை இயக்​கும்​போது கவனச் சிதறல் ஏற்​பட்டு சாலை விபத்​துகள் ஏற்பட அதிக வாய்ப்​புள்​ளது.

எனவே, இனிவரும் காலங்​களில் மாநகர போக்​கு​வரத்​துக் கழகத்​தின் ஓட்டுநர்கள் பணி​யின்​போது தங்​களது செல்​போன்​களை தன்​னுடன் பணி செய்​யும் நடத்​துநரிடம் கொடுத்து வைக்க வேண்​டும்.

பணி முடிந்த பிறகு செல்​போனை நடத்​துநரிட​மிருந்து பெற்​றுச் செல்ல வேண்​டும். ஓட்டுநர்கள் பணி​யின்​போது செல்​போன்​கள் வைத்​திருப்​ப​தாக பரிசோதகர்​கள் மற்​றும் அலு​வலர்​கள் மூலம் கண்​டறியப்​பட்​டால் உரிய நடவடிக்கை எடுக்​கப்​படும். இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here