இலங்கைக்கு எதிரான சர்வதேச டி20 தொடரில் விளையாடவுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணியிலிருந்து பாபர் அசம், முகமது ரிஸ்வான், ஷாஹீன் ஷா அப்ரிடி ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். அணியில் புதிதாக விக்கெட் கீப்பர் கவாஜா நபாய் சேர்க்கப்பட்டுள்ளார்.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்து பாகிஸ்தான் அணி சர்வதேச டி20 கிரிக்கெட் தொடரில் வரும் ஜனவரி 7-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை விளையாடவுள்ளது. இதற்கான பாகிஸ்தான் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவின் பிக் பாஷ் கிரிக்கெட் லீக் தொடரில் பாபர் அசம், முகமது ரிஸ்வான், ஷாஹீன்ஷா அப்ரிடி ஆகியோர் பங்கேற்று விளையாடி வருவதால் அவர்கள் இந்த அணியில் சேர்க்கப்படவில்லை. அணியில் புதிதாக விக்கெட் கீப்பர் கவாஜா நபாய் சேர்க்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் அணி விவரம்: சல்மான் அலி அகா (கேப்டன்), அப்துல் சமத், அப்ரார் அகமது, பாஹீம் அஷ்ரப், பகர் ஸமான், கவாஜா நபாய், முகமது நவாஸ், முகமது சல்மான் மிர்சா, முகமது வாசிம் ஜூனியர், நசீம் ஷா, சாஹிப்சதா பர்ஹான், சயீம் அயூப், ஷதாப் கான், உஸ்மான் கான், உஸ்மான் தாரிக்.

