பாஜகவின் வளர்ச்சிக்கு உதவும் காங்கிரஸ்: கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு

0
14

கேரள மாநிலத்​தில் பாஜக​ வளர்ச்​சிக்கு காங்​கிரஸ் கட்சி வழி​வகுப்​ப​தாக முதல்​வர் பின​ராயி விஜயன் நேற்று குற்​றம்​சாட்​டி​யுள்​ளார்.

இதுகுறித்து பின​ராயி விஜயன் பேஸ்​புக் பதி​வில் கூறி​யுள்​ள​தாவது: மட்​டத்​தூரில் நடை​பெற்ற பஞ்​சா​யத்து தேர்​தலில் 8 காங்​கிரஸ் கவுன்​சிலர்​கள் அக்​கட்​சியி​லிருந்து வில​கி, தலை​வர் பதவிக்கு போட்டியிட்ட ஒரு சுயேச்சை வேட்​பாள​ருக்கு ஆதர​வளிக்க பாஜக​வுடன் கைகோத்​தனர். இதன்​மூலம், காங்​கிரஸார் பாஜக​வில் சேரு​வதற்கு வாய்ப்​புக்​காக காத்​திருப்​பதை மட்​டத்​தூர் சம்​பவம் உறு​திப்​படுத்​தி​யுள்​ளது. பாஜக அவர்​களை முழு​வது​மாக விழுங்​கி​விட்​டது. இத்​தகைய அரசி​யல் நாடகம் கேரளா​வில் முன்​னெப்​போதும் கண்​டி​ராத நிகழ்​வாகும்.

2016-ல் அருணாச்​சலப் பிரதேசத்​தில் முதலமைச்​சர் உட்பட 44 காங்​கிரஸ் எம்​எல்​ஏ-க்​களில் 43 பேர் ஒரே இரவில் என்​டிஏ-வுக்​குத் தாவியதை யாரும் மறந்​திருக்க முடி​யாது. 2021-ல் ஒரு எம்​.எல்​.ஏ. கூட இல்​லாத​போ​தி​லும் பாஜக ஆட்​சிக்கு வந்த புதுச்​சேரி, 2019-ல் முழு காங்​கிரஸ் சட்​டமன்​றக் கட்​சி​யும் பாஜக-வுடன் இணைந்த கோவா​வும் இதற்​கான ஏனைய சிறந்த உதா​ரணங்​கள்.

மட்​டத்​தூரில் ஒரு எல்​டிஎஃப் தலை​வர் பதவிக்கு வரு​வதைத் தடுப்​ப​தற்​காகவே காங்​கிரஸ் தலை​வர்​கள் பாஜக-வுடன் கைகோத்​தனர். இதிலிருந்து நிரூபண​மாவது என்​னவென்​றால், இன்று காங்​கிரஸில் இருப்​பவர்​கள் ஒரே இரவில் பாஜக-​வின​ராக மாறத் தயங்க மாட்​டார்​கள் என்​பது​தான்.

காங்​கிரஸ் தலை​வர்​கள் தங்​கள் கை சின்​னத்​திற்​குப் பதிலாக தாமரைச் சின்​னத்தை ஏற்​றுக் கொள்​வ​தில் எந்த தார்​மீக முரண்​பாட்​டை​யும் உணர்​வ​தில்லை என்​பது வெளிப்​படை.

உள்​ளாட்​சித் தேர்​தல் முடிவு​களில் பிர​திபலித்​த​படி, மாநிலம் முழு​வதும் பல இடங்​களில் பாஜக-​காங்​கிரஸ் இடையே சமரசங்​கள் ஏற்​பட்​டுள்​ளது தெளி​வாகத் தெரி​கின்​றன. இங்கு பாஜக​வின் வளர்ச்​சிக்கு காங்​கிரஸ் கைகொடுக்​கிறது. இவ்​வாறு பின​ராயி விஜயன் தெரி​வித்​துள்​ளார்.

இதற்​கிடை​யில், கேரள சட்​டமன்ற எதிர்க்​கட்​சித் தலை​வர் வி.டி. சதீசன், மட்​டத்​தூர் பஞ்​சா​யத்​தில் காங்​கிரஸ் உறுப்​பினர்​கள் பாஜக-வுக்கு மாறிய​தாகக் கூறப்​படும் குற்​றச்​​சாட்​டு​களை மறுத்​​தார்​. கேரள மாநிலத்தில் வி​வா​திப்பதற்கு வேறு எந்​தப்​ பிரச்​சினை​களும்​ இல்​லாத​தால்​ மட்​டத்​தூர்​ சம்​பவத்​தை சிபிஎம்​ எழுப்​புவ​தாக அவர்​ கூறியுள்​ளார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here