இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 3 பேர் கைது

0
14

இலங்கை கடற்​படை​யின​ரால் ராமேசுவரம் மீனவர்கள் 3 பேர் கைது செய்​யப்​பட்​டனர். ராமேசுவரம் அருகே மண்​டபம் மீன்​பிடித் துறை​முகத்​திலிருந்து கடந்த சனிக்​கிழமை 100-க்​கும் மேற்​பட்ட விசைப் படகு​களில் 300-க்​கும் மேற்​பட்ட மீனவர்​கள் கடலுக்​குச் சென்​றனர்.

நேற்று அதி​காலை நெடுந்​தீவு அருகே பாக் நீரிணைக் கடற்​பகு​தி​யில் மண்​டபம் மீனவர்கள் மீன்​பிடித்​துக் கொண்​டிருந்​தனர். அப்​போது, அங்கு வந்த இலங்கை கடற்​படை​யினர், எல்லை தாண்டி வந்து மீன் பிடித்​த​தாகக் கூறி சந்​தியா ஜோசப் என்​பவரது விசைப்​படகை சிறைபிடித்​தனர்.

மேலும், படகில் இருந்த அமோஸ்​டின், ஜெனி​டாஸ், ஜெபஸ்​டின் ஆகிய 3 மீனவர்​களைக் கைது செய்​து, காங்​கேசன்​துறை கடற்​படை முகா​முக்கு கொண்​டு​சென்​றனர். பின்னர் மீனவர்கள் அந்​நாட்டு மீன்​வளத்​துறை அதி​காரி​களிடம் ஒப்​படைக்​கப்​பட்​டனர்.

தொடர்ந்​து, எல்லை தாண்டி மீன்​பிடித்​தல், தடை செய்​யப்​பட்ட வலைகளைப் பயன்​படுத்​துதல் உள்​ளிட்ட பிரிவு​களின் கீழ் மீனவர்கள் மீது குற்​றப் பத்​திரிகை தாக்​கல் செய்​து, ஊர்​காவல் துறை நீதி​மன்​றத்​தில் ஆஜர்​படுத்​தினர். இவ்​வழக்கை விசா​ரித்த நீதிப​தி, 3 பேரை​யும் ஜன. 7-ம் தேதி வரை நீதி​மன்​றக் காவலில் வைக்க உத்​தர​விட்​டார்.

முதல்​வர் ஸ்டா​லின் கடிதம்: தமிழக முதல்​வர் மு.க.ஸ்​டா​லின், மத்​திய வெளி​யுறவுத் துறை அமைச்​சர் எஸ்​.ஜெய்​சங்​கருக்கு அனுப்​பி​யுள்ள கடிதத்​தில் கூறி​யுருப்​ப​தாவது: ராம​நாத​புரம் மீனவர்கள் 3 பேரை இலங்கை கடற்​படை​யினர் கைது செய்​துள்​ளனர். தமிழக மீனவர்கள் கைது செய்​யப்​பட்​டு, அவர்​களது படகு​கள் இலங்கை அதி​காரி​களால் சிறை பிடிக்​கப்​படு​வது தொடர்​வ​தால், மீனவர்​களின் வாழ்​வா​தா​ரம் கடுமை​யாகப் பாதிக்​கப்​பட்​டுள்​ளது.

எனவே, இது​போன்ற கைது சம்​பவங்​கள் நிகழாமல் தடுக்​க​வும், இலங்​கை​யில் காவலில் உள்ள அனைத்து மீனவர்​களை​யும் அவர்​களது மீன்​பிடிப் படகு​களை​யும் விரை​வாக விடுவிக்​க​வும் உரிய தூதரக வழிகளை உடனடி​யாக மேற்​கொள்ள வேண்​டும். இவ்​வாறு முதல்​வர் கடிதத்​தில் வலி​யுறுத்​தி​யுள்​ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here