பிரபுதேவா கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம், ‘மூன்வாக்’. இதில் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, ராஜேந்திரன், லொள்ளு சபா சுவாமிநாதன் உள்பட பலர் நடித்துள்ளனர். மனோஜ் நிர்மலா ஸ்ரீதரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். பிஹைண்ட்வுட்ஸ் புரொடக் ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்தின் அனைத்து பாடல்களையும் ஏ.ஆர்.ரஹ்மான் பாடியுள்ளார். இதன் மினி கேசட்டை யூடியூப்பில் வெளியிட்டுள்ளனர்.
இதுகுறித்து இயக்குநர் மனோஜ் கூறும்போது, “மூன்வாக் முழுநீள நகைச்சுவை திரைப்படம். அதே நேரம், இதில் இசை, பாடல் உருவாக்கம் மற்றும் நடன அமைப்புக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. 29 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபுதேவாவும் ஏ.ஆர்.ரஹ்மானும் இப்படத்துக்காக மீண்டும் ஒன்றாக இணைத்துள்ளனர்” என்றார். இதன் இசை வெளியீட்டு விழா ஜன. 4-ம் தேதி நடைபெறவுள்ளது.







