சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ படத்துக்கு தடை கோரி வழக்கு: தயாரிப்பு நிறுவனம் பதிலளிக்க நோட்டீஸ்

0
16

நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா நடித்துள்ள படம், ‘பராசக்தி’ ஆ​காஷ் பாஸ்​கரனின் டான் பிக்​சர்ஸ் தயாரித்​துள்ள இப்​படத்தை சுதா கொங்​கரா இயக்​கி​யுள்​ளார். ஜன. 10-ம் தேதி இப்​படம் வெளி​யாக இருக்​கிறது. இந்​நிலை​யில் இப்​படத்​தின் கதை தன்​னுடையது எனக் கூறி, இணை இயக்​குந​ரான ராஜேந்​திரன் என்​பவர் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​திருந்​தார்.

அதில் இந்தி திணிப்பை எதிர்த்து நடத்​தப்​பட்ட மொழிப்​போரை மைய​மாக வைத்து ‘செம்​மொழி’ என்ற பெயரில் கதை எழுதி 2010-ம் ஆண்டு தென்​னிந்​திய திரைப்பட எழுத்​தாளர்​கள் சங்​கத்​தில் பதிவு செய்​துள்​ளேன். மறைந்த முன்​னாள் முதல்​வர் கருணாநி​தி​யின் ‘பெண் சிங்​கம்’ படத்​தில் உதவி இயக்​குந​ராக பணி​யாற்​றிய​போது அவரிடம் இந்த கதையை தெரி​வித்​தேன்.

அவரது ஆலோ​சனை​யின்​பேரில் இந்த கதையை எழு​தினேன். அதன்​பிறகு இந்த கதையை பல தயாரிப்​பாளர்​களிடம் தெரி​வித்​தேன். இந்​நிலை​யில் என்​னுடைய ‘செம்​மொழி’ கதைக்​களத்தை அப்​படியே திருடி ‘பராசக்​தி’ என்ற பெயரில் படத்தைத் தயாரித்​துள்​ளனர். இதுதொடர்​பாக திரைப்பட எழுத்​தாளர்​கள் சங்​கத்​தில் கடந்த ஜனவரி மாதம் புகார் அளித்​தும் எந்த நடவடிக்​கை​யும் எடுக்​கப்​பட​வில்​லை.

எனது கதையை​யும், பராசக்தி கதையை​யும் ஒப்​பிட்டு பார்த்து ஆய்வு செய்ய நிபுணர் குழு​வை​யும் அமைக்க வேண்​டும். அது​வரை பராசக்தி படத்தை வெளி​யிடதடை விதிக்க வேண்​டும் என கோரி​யிருந்தார். இந்த வழக்கு விடு​முறை கால அமர்​வில் நீதிபதி எஸ்​.எம்​.சுப்​ரமணி​யம் முன்​பாக விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது பராசக்தி படத்​த​யாரிப்பு நிறு​வனம் தரப்​பில் மூத்த வழக்​கறிஞர் பி.ஹெச்​.அர​விந்த் பாண்​டியனும் வழக்​கறிஞர் விஜயன் சுப்​ரமணி​யனும் ஆஜராகி வாதிட்​டனர். அதையடுத்து நீதிப​தி, இந்​தப் படத்​துக்கு தடை விதிக்க முடி​யாது என மறுப்பு தெரி​வித்​து, இதுதொடர்​பாக பராசக்தி தயாரிப்பு நிறு​வன​மும், திரைப்பட எழுத்​தாளர்​கள் சங்​க​மும் பதில் அளிக்க நோட்​டீஸ் பிறப்​பித்து விசா​ரணையை ஜன.2-ம் தேதிக்கு தள்ளிவைத்​தார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here