வண்ணான்குளம், பெரவள்ளூரில் ஏரி ஆக்கிரமிப்புகளை உடனே அகற்ற வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

0
16

கொளத்​தூர் அடுத்த வண்​ணான்​குளம், பெர​வள்​ளூர் ஏரி​களில் உள்ள ஆக்​கிரமிப்​பு​களை போர்க்​கால அடிப்​படை​யில் அகற்ற வேண்​டும் என்று உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

இதுதொடர்​பாக சென்னை செம்​பி​யத்தை சேர்ந்த ஜி.தேவ​ராஜன் என்​பவர் உயர் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்த மனு​வில் கூறி​யிருந்​த​தாவது: கொளத்​தூர் ஜிகேஎம் காலனி பகு​தி​யில் உள்ள வண்​ணான்​குளம் ஏரி, பெர​வள்​ளூர் ஏரி பகு​தியை சேர்ந்த சுமார் 300 ஏக்​கர் நிலங்​கள் முழு​மை​யாக ஆக்​கிரமிப்​பின் பிடி​யில் சிக்​கி​உள்​ளன.

இந்த ஏரிகளைச் சுற்​றி​உள்ள அரசு புறம்​போக்கு நிலங்​களும் அதி​காரி​களின் துணை​யுடன் ஆக்​கிரமிக்​கப்​பட்​டு, கட்​டு​மானங்​களாக மாற்​றப்​பட்​டுள்​ளன. இவ்​வாறு ஆக்​கிரமிக்​கப்​பட்ட நிலங்​களின் தற்​போதைய சந்தை மதிப்பு ரூ.10 ஆயிரம் கோடிக்கு மேல் இருக்​கும். இந்த 2 ஏரி​களி​லும் உள்ள ஆக்​கிரமிப்​பு​களை எந்த அரசி​யல் தலை​யீடும் இல்​லாமல் முழு​மை​யாக அகற்ற அதி​காரி​களுக்கு உத்​தர​விட வேண்​டும்.

இவ்​வாறு மனு​வில் அவர் கோரி​யிருந்​தார். தலைமை நீதிபதி எம்​.எம்​. ஸ்ரீவஸ்​த​வா, நீதிபதி ஜி.அருள்​முரு​கன் அமர்​வில் இந்த வழக்கு விசா​ரணை நடந்​தது. அப்​போது, அம்​பத்​தூர் வரு​வாய்க் கோட்​டாட்​சி​யர் தரப்​பில், ‘இந்த ஏரிகளில் பெரும்​பாலான பகு​தி​கள் ஆக்​கிரமிப்​பில் உள்ளன.

தமிழ்​நாடு குடிசை மாற்று வாரி​யம் சார்​பில் பெருநகர கூட்​டுறவு வீட்டு வசதி சங்​கத்​துக்கு அதி​கப்​படி​யான நிலங்​கள் ஒதுக்​கப்​பட்​டு, அப்​பகு​தி​களில் 50 ஆண்​டு​களுக்​கும் மேலாகஆயிரக்​கணக்​கான குடும்​பங்​கள் வசித்து வரு​கின்​றன’ என்று தெரிவிக்​கப்​பட்​டது.

இதையடுத்​து, நீதிப​தி​கள் கூறிய​தாவது: வண்​ணான்​குளம் மற்றும் பெர​வள்​ளூர் ஏரிகள் ஆக்​கிரமிப்​பில் இருப்​பது வரு​வாய்த் துறை அதி​காரி​களின் அறிக்​கை​யில் தெளி​வாகி​யுள்​ளது.

எனவே, 2 ஏரிப் பகு​தி​களில் உள்ள ஆக்​கிரமிப்​பு​களை வரு​வாய்த் துறை​யினருடன் இணைந்து குடிசை மாற்று வாரி​யம், சென்னை மாநக​ராட்சி அதி​காரி​கள் போர்க்​கால அடிப்​படை​யில் அகற்ற வேண்​டும்.

இந்த பணி​களை கண்​காணி்க்க இந்த 3 துறை​களி​லும் உள்ள மூத்த அதி​காரி​கள் அடங்​கிய குழுவை நில நிர்​வாக ஆணை​யர் அமைக்க வேண்​டும். ஆக்​கிரமிப்​பு​கள் அகற்​றப்​பட்ட பிறகு, அதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்​டும். இவ்​வாறு உத்​தர​விட்​டு, வழக்கை நீதிப​தி​கள் முடித்து வைத்​தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here