286 ரன்களுக்கு இங்கிலாந்து ஆல் அவுட்: ஆஸ்திரேலிய அணி ஆதிக்கம் – ஆஷஸ் கிரிக்கெட் தொடரின் 3-வது டெஸ்ட்

0
28

ஆஸ்திரேலிய அணிக்கு எ​தி​ரான ஆஷஸ் கிரிக்​கெட் தொடரின் 3-வது டெஸ்ட் போட்​டி​யின் முதல் இன்​னிங்​ஸில் இங்​கிலாந்து அணி 286 ரன்​களுக்கு ஆல் அவுட் ஆனது.

அடிலெய்​டில் நடை​பெற்று வரும் இந்த டெஸ்ட் போட்​டி​யில் டாஸ் வென்று பேட் செய்த ஆஸ்​திரேலிய அணி முதல் நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 83 ஓவர்​களில் 8 விக்​கெட்​கள் இழப்​புக்கு 326 ரன்​கள் குவித்​தது. அதி​கபட்​ச​மாக அலெக்ஸ் கேரி 109, உஸ்​மான் கவாஜா 82 ரன்​கள் சேர்த்​தனர். மிட்​செல் ஸ்டார்க் 33 ரன்​களும், நேதன் லயன் ரன் ஏதும் சேர்க்​காமல் களத்​தில் இருந்​தனர். நேற்று 2-வது நாள் ஆட்​டத்தை ஆஸ்​திரேலிய அணி தொடர்ந்து விளை​யாடியது. தனது 13-வது அரை சதத்தை கடந்த மிட்​செல் ஸ்டார்க் 75 பந்​துகளில், 9 பவுண்​டரி​களு​டன் 54 ரன்​கள் எடுத்த நிலை​யில் ஜோப்ரா ஆர்ச்​சர் பந்​தில் போல்​டா​னார். இதைத் தொடர்ந்து நேதன் லயன் 9 ரன்​களில் ஜோப்ரா ஆர்ச்​சர் பந்​தில் எல்​பிடபிள்யூ முறை​யில் வெளி​யேற ஆஸ்​திரேலிய அணி 91.2 ஓவர்​களில் 371 ரன்​கள் குவித்து ஆட்​ட​மிழந்​தது.

ஸ்காட் போலண்ட் 14 ரன்​களு​டன் களத்​தில் இருந்​தார். இங்​கிலாந்து அணி தரப்​பில் ஜோப்ரா ஆர்ச்​சர் 5 விக்​கெட்​களை வீழ்த்​தி​னார். பிரைடன் கார்​ஸ், வில் ஜேக்ஸ் ஆகியோர் தலா 2 விக்​கெட்​களை​யும், ஜோஷ் டங் ஒரு விக்​கெட்​டை​யும் கைப்​பற்​றினர்.

இதையடுத்து பேட் செய்த இங்​கிலாந்து அணி சீரான இடைவெளி​யில் விக்​கெட்​களை பறி​கொடுத்​தது. ஸாக் கிராவ்லி 9 ரன்​கள் எடுத்த நிலை​யில் பாட் கம்​மின்ஸ் பந்​தில் விக்​கெட் கீப்​பர் அலெக்ஸ் கேரி​யிடம் கேட்ச் கொடுத்து ஆட்​ட​மிழந்​தார். 10-வது ஓவரை வீசிய நேதன் லயன் 2 விக்​கெட்​களை வீழ்த்தி நெருக்​கடி கொடுத்​தார். அவரது சுழலில் ஆலி போப் 3 ரன்​களில் மிட்விக்​கெட் திசை​யில் ஜோஷ் இங்​லிஷிடம் பிடி​கொடுத்து நடையை கட்​டி​னார். தொடர்ந்து பென் டக்​கெட் 30 பந்​துகளில், 5 பவுண்​டரி​களு​டன் 29 ரன்​கள் எடுத்த நிலை​யில் போல்​டா​னார்.

சீனியர் பேட்​ஸ்​மே​னான ஜோ ரூட் 19 ரன்​களில் தனது விக்​கெட்டை பாட் கம்​மின்​ஸிடம் எளி​தாக பறி​கொடுத்​தார். அதிரடி​யாக விளை​யாட முயன்ற ஹாரி புரூக் 63 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 2 பவுண்​டரி​களு​டன் 45 ரன்​கள் எடுத்த நிலை​யில் கேமரூன் கிரீன் பந்​தில் அலெக்ஸ் கேரியிடம் கேட்ச் கொடுத்து வெளி​யேறி​னார். இதன் பின்​னர் ஜேமி ஸ்மித் 22 ரன்​கள் எடுத்த நிலை​யில் கம்​மின்ஸ் பந்​தில் ஆட்​ட​மிழந்​தார்.

இதையடுத்து களமிறங்​கிய வில் ஜேக்ஸ் 6 ரன்​களி​லும், பிரைடன் கார்ஸ் ரன் ஏதும் எடுக்​காமலும் ஸ்காட் போலண்ட் பந்​தில் நடையை கட்​டினர். ஒரு முனை​யில் விக்​கெட்​கள் சரிந்த போதி​லும் மறு​முனை​யில் கேப்​டன் பென் ஸ்டோக்ஸ் நிலைத்து நின்று விளை​யாடி​னார். அவருக்கு உறு​துணை​யாக ஜோப்ரா ஆர்ச்​சர் சீராக ரன்​கள் சேர்த்​தார்.

2-வது நாள் ஆட்​டத்​தின் முடி​வில் இங்​கிலாந்து அணி 68 ஓவர்​களில் 8 விக்​கெட்​கள் இழப்​புக்கு 213 ரன்​கள் எடுத்​தது. பென் ஸ்டோக்ஸ் 151 பந்​துகளில், 3 பவுண்​டரி​களு​டன் 45 ரன்​களும், ஜோப்ரா ஆர்ச்​சர் 48 பந்​துகளில், 4 பவுண்​டரி​களு​டன் 30 ரன்களும் சேர்த்து ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தனர்.

கைவசம் 2 விக்​கெட்​கள் மட்​டுமே இருக்க 158 ரன்​கள் பின்​தங்​கி​யுள்ள இங்​கிலாந்து அணி இன்று 3-வது நாள்​ ஆட்​டத்​தை தொடர்ந்தது. இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 83 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். அவர் 8 பவுண்டரிகளை விளாசி இருந்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் அரை சதத்தை பதிவு செய்த ஆர்ச்சர், 51 ரன்களில் வெளியேறினார். 87.2 ஓவர்களில் 286 ரன்களுக்கு இங்கிலாந்து ஆட்டமிழந்தது. 8 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் என்ற நிலையில் இங்கிலாந்து இருந்தது. அப்போது ஜோடி சேர்ந்த ஸ்டோக்ஸ் மற்றும் ஆர்ச்சர் இணைந்து 9-வது விக்கெட்டுக்கு 106 ரன் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

ஆஸ்​திரேலிய அணி தரப்​பில் பாட் கம்​மின்ஸ் தலா, ஸ்காட் போலண்ட் தலா 3 விக்​கெட்​களை வீழ்த்​தி​னர். நேதன் லயன் 2 விக்​கெட்​களை​யும், கேமரூன் கிரீன் மற்றும் ஸ்டார்க் ஒரு விக்​கெட்​டை​யும் கைப்​பற்​றினர்.

மூன்றாம் நாள் ஆட்ட மதிய உணவு நேர இடைவேளையின் போது ஆஸ்திரேலிய அணி இந்த ஆட்டத்தில் 102 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. 2-வது இன்னிங்ஸில் 5 ஓவர்களில், 1 விக்கெட் இழப்புக்கு 17 ரன்கள் எடுத்துள்ளது அந்த அணி.

மெக்ராத் சாதனையை முயறிடித்த லயன்: அடிலெய்டு டெஸ்ட் போட்டியின் 2-வது நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளரான நேதன் லயன் 2 விக்கெட்களை (ஆலி போப், பென் டக்கெட்) வீழ்த்தினார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்களை வீழ்த்திய ஆஸ்திரேலிய வீரர்களின் பட்டியலில் கிளென் மெக்ராத்தை (563) பின்னுக்குத்தள்ளி 2-வது இடத்துக்கு முன்னேறினார் நேதன் லயன். 125 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள நேதன் லயன் 564 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார். இந்த வகை சாதனையில் ஆஸ்திரேலிய வீரர்களில் மறைந்த முன்னாள் வீரர் ஷேன் வார்ன் (708) முதலிடத்தில் உள்ளார்.

நாற்காலியுடன் பாய்ந்த மெக்ராத்: அடிலெய்டு டெஸ்ட் போட்டியின் 2-வது நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளரனா நேதன் லயன் 2 விக்கெட்களை வீழ்த்தினார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்கள் வீழ்த்திய ஆஸ்திரேலிய அணியின் வீரர்களில் கிளென் மெக்ராத்தை பின்னுக்குத்தள்ளி 2-வது இடத்தைப் பிடித்தார். இதை போட்டியை நேரடி வர்ணனை செய்தபடி பார்த்துக் கொண்டிருந்த கிளென் மெக்ராத் சிரித்தபடியே செல்ல கோபத்துடன் அருகில் இருந்த நாற்காலியை தூக்கி எறிவது போன்று செய்கை செய்தார். இதுதொடர்பான காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன.

மீண்டும் சர்ச்சை: அடிலெய்டு டெஸ்ட் போட்டியில் ஸ்னிக்கோ மீட்டர் சர்ச்சை தொடர்ந்தவாறு உள்ளது. முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன் அலெக்ஸ் கேரியின் மட்டையில் பந்து உரசி கேட்ச் ஆனது. ஆனால் ஸ்னிக்கோ மீட்டரில் பந்து மட்டையில் பட்டதற்கான ஆதாரம் இல்லையென அவுட் கொடுக்க மறுக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று இங்கிலாந்து அணியின் ஜேமி ஸ்மித், பாட் கம்மின்ஸ் பவுன்ஸரை எதிர்கொண்ட போது பந்து கையுறையில் பட்டு சிலிப் திசையில் உஸ்மான் கவாஜாவிடம் கேட்ச் ஆனது. ஆனால் ஸ்னிக்கோ மீட்டரில் பந்து பேட்ஸ்மேனுடன் எந்தவித தொடர்பும் இல்லாமல் இருப்பது போன்று காண்பித்தது. ஆனால் அடுத்த சில ஓவர்களில் கம்மின்ஸ் பந்தில் ஜேமி ஸ்மித் ஆட்டமிழந்தார். ஆனால் இம்முறை பந்து மட்டையில் உரசவில்லை. ஆனால் ஸ்னிக்கோ மீட்டரில் பந்து மட்டையில் உரசியதாக காண்பித்ததால் ஜேமி ஸ்மித் விரக்தியுடன் வெளியேறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here