சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு திடீரென ரத்து

0
12

நாட்​டில் இலக்​கி​யத்​துக்​கான உயரிய சாகித்ய அகாடமி விருதுகள் அறி​விப்பு திடீரென ரத்து செய்​யப்​பட்​டது. இதனால் எழுத்​தாளர்​கள் ஏமாற்​றம் அடைந்​தனர்.

இந்​தி​யா​வில் 24 மொழிகளில் சிறந்த கவிதை, நாவல், சிறுகதை, இலக்​கிய ஆய்​வு​களுக்கு சாகித்ய அகாடமி விருதுகள் ஆண்டுதோறும் வழங்​கப்​படு​கின்​றன.

இந்​நிலை​யில், 2025ம் ஆண்டு விருதுகளுக்​கான எழுத்தாளர்​களின் பட்டியலை தேர்​வுக் குழுக்கள் பரிந்​துரை செய்​தன. அதன் பின்​னர் சாகித்ய அகாடமி தேசிய நிர்​வாகக் குழுக்கூட்​டம் நேற்று நடை​பெற்​றது. அதில் 24 மொழிகளில் தேர்ந்​தெடுக்​கப்​பட்ட எழுத்​தாளர்​களின் பட்​டியல் சமர்ப்​பிக்​கப்​பட்டு ஒப்​புதலும் வழங்​கப்​பட்​டதாக கூறப்படுகிறது.

கூட்டத்துக்கு பின்னர் சாகித்ய அகாடமி விருதுகள் நேற்று மாலை அறிவிக்​கப்பட இருந்​தது. ஆனால், அகாடமி அதி​காரி​கள் திடீரென விருதுகள் அறி​விப்பை தவிர்த்​தனர். இதற்கு நிர்வாக குழு​வினர் எதிர்ப்பு தெரி​வித்​துள்​ளனர். “தேசிய நிர்​வாகக் குழு கூட்​டத்​தில் பெயர்​கள் பரிந்​துரைக்​கப்​பட்​டு, அதி​காரப்​பூர்​வ​மாக ஒப்​புதலும் வழங்​கப்​பட்டு விட்​டது. இந்​நிலை​யில், விருதுகளை அறிவிக்​காமல் காலம் தாழ்த்​து​வது சரியல்​ல” என்று அவர்​கள் அதிருப்தி தெரி​வித்​த​தாக கூறப்​படு​கிறது.

இதையடுத்து விருதுகள் அறிவிப்பதற்கான செய்தியாளர்கள் சந்திப்பையும் சாகித்ய அகாடமி நிர்வாகத்தினர் ரத்து செய்தனர். இன்று விருதுகள் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here