டெல்லியில் கடுமையான பனிமூட்டம் நிலவுவதால், சென்னை விமான நிலையத்தில் விமான சேவையில் தாமதம் ஏற்பட்டது. டெல்லியில் கடுமையான பனிமூட்டம் நிலவி வருகிறது.
இந்த மோசமான வானிலையால், டெல்லியில் இருந்து சென்னை வரும் விமானங்கள் தாமதமாக வருகின்றன. அந்த விமானங்கள், சென்னை வந்துவிட்டு, சென்னையில் இருந்து ஹைதராபாத், பெங்களூர் உள்ளிட்ட விமான நிலையங்களுக்கும் செல்ல இருப்பதால், அந்த சேவையும் தாமதம் ஆகின்றன.
நேற்று அதிகாலை முதல் மதியம் வரை, டெல்லியில் இருந்து சென்னை வரவேண்டிய ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ ஏர்லைன்ஸ் 4 விமானங்கள், சுமார் ஒன்றரை மணி நேரத்தில் இருந்து 3 மணி நேரம் வரை தாமதமாக வந்து சேர்ந்தன.
சென்னையில் இருந்து டெல்லி, பெங்களூர், ஹைதராபாத் புறப்பட்டு செல்ல வேண்டிய இண்டிகோ, ஏர் இந்தியா விமானங்கள், சுமார் ஒரு மணி நேரத்தில் இருந்து 4 மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டு சென்றன. விமானங்கள் தாமதம் குறித்து பயணிகளுக்கு முறையான அறிவிப்பு கொடுக்காததால், பயணிகள் அவதிக்குள்ளாகினர்.







