இந்திய மகளிர் லீக் (ஐடபிள்யூஎல்) கால்பந்து தொடர் வரும் டிசம்பர் 20-ம் தேதி கொல்கத்தாவில் தொடங்கும் என அகில இந்திய கால்பந்து சம்மேளனம் அறிவித்துள்ளது. இம்முறை போட்டி 2 கட்டங்களாக நடத்தப்படுகிறது.
முதல் கட்டம் டிசம்பர் 20 முதல் ஜனவரி 26 வரை நடைபெறும். இந்த காலக்கட்டத்தில் தொடரில் பங்கேற்கும் 8 அணிகளும் 28 ஆட்டங்களில் விளையாடும். போட்டிகள் அனைத்தும் நேஷனல் சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் மற்றும் கல்யானியில் உள்ள நகராட்சி மைதானத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
2-வது கட்ட போட்டி 2026ம் ஆண்டு ஏப்ரல் 20 முதல் மே 10 வரை நடைபெறும். டிசம்பர் 20ம் தேதி நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் சேது எஃப்சி – கிக்ஸ்டார்ஸ் எஃப்சி அணிகள் மோதுகின்றன.







