ஆடவருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி 2026ம் ஆண்டு ஜனவரி 15 முதல் பிப்ரவரி 6 வரை நமீபியா மற்றும் ஜிம்பாப்வேயில் நடைபெறுகிறது.
இந்த தொடருக்கான 15 பேர் கொண்ட யு-19 ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இடது கை சுழற்பந்து வீச்சாளரான ஆர்யன் சர்மா, மிதவேகப் பந்து வீச்சு ஆல்ரவுண்டரான ஜான் ஜேம்ஸ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இவர்களுடன் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த நாடன் கூரே, நிதேஷ் சாமுவேல், சீன வம்சாவளியைச் சேர்ந்த அலெக்ஸ் லீ யங் ஆகியோருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நடப்பு சாம்பியனான யு-19 அணிக்கு ஆலிவர் பீக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
யு-19 உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணி ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. இதே பிரிவில் அயர்லாந்து, ஜப்பான், இலங்கை அணிகளும் உள்ளன.
அணி விவரம்: ஆலிவர் பீக் (கேப்டன்), கேசி பார்டன், நாடன் கூரே, ஜெய்டன் டிராப்பர், பென் கார்டன், ஸ்டீவன் ஹோகன், தாமஸ் ஹோகன், ஜான் ஜேம்ஸ், சார்லஸ் லாச்மண்ட், வில் மலாஜ்சுக், நிதேஷ் சாமுவேல், ஹேடன் ஷில்லர், ஆர்யன் சர்மா, வில்லியம் டெய்லர், அலெக்ஸ் லீ யங்.







