வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டால் சமையல் பாத்திரங்களுடன் போராடுங்கள்: மம்தா

0
11

மேற்​கு​வங்க வாக்​காளர் பட்​டியலில் இருந்து பெயர் நீக்​கப்​பட்​டால் சமையல் பாத்​திரங்​களு​டன் பெண்​கள் போராட வேண்​டும் என்று அந்த மாநில முதல்​வர் மம்தா பானர்ஜி தெரி​வித்​துள்​ளார்.

வரும் மார்ச் அல்​லது ஏப்​ரல் மாதத்​தில் மேற்​கு​வங்க சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நடை​பெறும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது. இதையொட்டி அந்த மாநிலத்​தில் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தப் பணி (எஸ்​ஐஆர்) நடை​பெற்று வரு​கிறது. இந்த சூழலில் மேற்​கு​வங்​கத்​தின் கிருஷ்ணாநகரில் நேற்று நடை​பெற்ற திரிண​மூல் காங்​கிரஸ் பொதுக்​கூட்​டத்​தில் முதல்​வர் மம்தா பானர்ஜி பேசி​ய​தாவது:

மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷாவின் ஒரு கண்​ணில் துரியோதனனும் மறுகண்​ணில் துச்​சாதனனை​யும் பார்க்​கலாம். அவர் மிக​வும் ஆபத்​தானவர். அடுத்த ஆண்டு நடை​பெற உள்ள சட்​டப்​பேர​வைத் தேர்​தலை முன்​னிட்டு மேற்​கு​வங்​கத்​தில் எஸ்​ஐஆர் பணி மேற்​கொள்​ளப்​படு​கிறது. வங்​கதேச மக்​களை முகாம்​களில் அடைப்​போம் என்று மத்​திய அமைச்​சர் அமித் ஷா எச்​சரிக்கை விடுக்​கிறார். பாஜக​வுக்கு ஆதர​வான மத்​திய அரசின் மூத்த அரசு அதி​காரி​கள் மேற்​கு​வங்​கத்​தில் முகாமிட்டு மாவட்ட ஆட்​சி​யர்​களுக்கு நிர்​பந்​தம் அளித்து வரு​கின்​றனர்.

நான் இது​வரை எஸ்​ஐஆர் படிவத்தை பூர்த்தி செய்​ய​வில்​லை. எனது குடி​யுரிமையை நிரூபிக்க வேண்​டிய அவசி​யம் இல்​லை. எஸ்​ஐஆர் என்ற பெயரில் மேற்​கு​வங்க பெண்​களின் பெயர்​களை வாக்​காளர் பட்​டியலில் இருந்து நீக்க முயற்சி மேற்​கொள்​ளப்​படு​கிறது.

ஒரு​வேளை வாக்​காளர் பட்​டியலில் உங்​கள் பெயர் நீக்​கப்​பட்​டால், சமையல் பாத்​திரங்​களு​டன் பெண்​கள் போராட தயா​ராக இருக்க வேண்​டும். முன்​வரிசை​யில் பெண்​களும், அவர்​களுக்கு பக்​கபல​மாக பின்​வரிசை​யில் ஆண்​களும் களமிறங்க வேண்​டும்.

தூய்​மை, மனி​தாபி​மானம், அமை​தியை பகவான் கிருஷ்ணர் போதித்​தார். வன்​முறை, பிரி​வினையை அவர் போதிக்​க​வில்​லை. சுவாமி ராமகிருஷ்ண பரமஹம்​சர், சுவாமி விவே​கானந்​தர், கவிஞர் ரவீந்​திர​நாத் தாகூர், சுதந்​திர போராட்ட தலை​வர் நேதாஜி சுபாஷ் சந்​திர போஸ் ஆகியோர் மக்​களிடையே ஒற்​றுமையை வளர்த்​தனர். அவர்​கள் ஒரு​போதும் பிரி​வினையை தூண்​ட​வில்​லை.

நாட்​டின் சுதந்​திரத்​துக்​காக மேற்​கு​வங்க மக்​கள் தங்​கள் உயிரை தியாகம் செய்​தனர். ஆனால் இப்​போது எஸ்​ஐஆர் மூலம் மாநில மக்​களின் குடி​யுரிமை கேள்விக்​குறி​யாகி இருக்​கிறது. சாதாரண வங்க புலியை​விட, அடிபட்ட வங்க புலி ஆக்​ரோஷ​மானது. நீங்​கள் எங்​களை தாக்​கி​னால் எப்​படி பதில் அளிக்க வேண்​டும் என்​பது எங்​களுக்கு தெரி​யும். அநீ​தியை தடுத்து நிறுத்​து​வோம். இந்த நேரத்​தில் பொது மக்​கள் யாரும் எல்லை பாது​காப்பு படை​யின் நிலைகளுக்கு செல்ல வேண்​டாம். இது மிக​வும் ஆபத்தானது. இவ்​வாறு அவர் பேசி​னார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here