டி 20-ல் ஹர்திக் பாண்டியா 100 சிக்ஸர்கள் விளாசல்

0
18

இந்​தியா – தென் ஆப்​பிரிக்கா அணி​கள் இடையி​லான 5 ஆட்​டங்​கள் கொண்ட டி 20 கிரிக்​கெட் தொடரின் முதல் ஆட்​டம் கட்​டாக்​கில் நேற்று நடை​பெற்​றது.

இதில் முதலில் பேட் செய் இந்​திய அணி 20 ஓவர்​களில் 6 விக்கெட்கள் இழப்​புக்கு 175 ரன்​கள் குவித்​தது. ஆல்-​ர​வுண்​ட​ரான ஹர்​திக் பாண்​டியா அதிரடி​யாக விளை​யாடி 28 பந்​துகளில், 4 சிக்ஸர்​கள், 6 பவுண்​டரி​களு​டன் 59 ரன்​கள் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்​தார்.

சர்​வ​தேச டி 20 அரங்​கில் ஹர்​திக் பாண்​டியா அடித்த 6-வது அரை சதமாக இது அமைந்​தது. மேலும் இந்த போட்​டி​யில் அவர், 4 சிக்ஸர்​கள் விளாசி​யதன் மூலம் சர்​வ​தேச டி 20-ல் 100 சிக்​ஸர்​கள் விளாசிய 4-வது இந்​திய வீரர் என்ற பெரு​மையை பெற்​றார்.

அவர், 121-வது ஆட்​டத்​தில் இந்த மைல்​ கல்லை எட்​டி​யுள்​ளார். இந்த வகை சாதனை​யில் இந்​திய வீரர்​களில் ரோஹித் சர்மா (205), சூர்​யகு​மார் யாதவ் (155), வி​ராட் கோலி (124) ஆகியோர் முதல் 3 இடங்​களில்​ உள்​ளனர்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here