மாதவிடாய் விடுமுறைக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் தடை

0
17

 க‌ர்​நாட​கா​வில் அரசு மற்​றும் தனி​யார் நிறுவனங்​களில் பணி​யாற்​றும் பெண் பணி​யாள‌ர்​களுக்கு மாதம் ஒரு​நாள் ஊதி​யத்​துடன்​கூடிய மாதவிடாய் விடுமுறை வழங்க அம்​மாநில அரசு உத்​தர​விட்​டது. இந்த உத்​தர​வுக்கு எதி​ராக தொடரப்​பட்ட வழக்​கில் கர்​நாடக உயர் நீதி​மன்​றம் இடைக்​கால தடை விதித்​துள்​ளது.

கர்​நாட​கா​வில் அரசு மற்​றும் தனி​யார் நிறு​வனங்​களில் பணி​யாற்​றும் 18 முதல் 52 வயது வரையி​லான பெண் பணி​யாளர்​களுக்கு மாத​வி​டாய் காலத்​தில் மாதம் ஒரு​நாள் ஊதி​யத்​துடன் விடு​முறை அளிக்க அம்​மாநில அரசு கடந்த நவம்​பர் 20-ம் தேதி உத்​தர​விட்​டது.

இதற்கு எதிர்ப்பு தெரி​வித்து பெங்​களூரு உணவக உரிமை​யாளர்​கள் சங்​கத்​தின் சார்​பில் கர்​நாடக உயர் நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​யப்​பட்​டது. அதில், மாத​வி​டாய் விடுப்பு வழங்க நிறு​வனங்​கள் சம்​பந்​தப்​பட்ட சட்​டத்​தில் அரசுக்கு எந்த அதி​கார​மும் இல்​லை.

அரசின் அறி​விப்​பாணை​யின் மூல​மாக இந்த விடு​முறையை நடை​முறைப்​படுத்த முடி​யாது. இந்த முடிவை அரசு அறி​விப்​ப​தற்கு முன்​பாக, தனி​யார் நிறு​வனங்​கள் மற்​றும் தொழில் துறை​யினரிடம் அரசு ஆலோ​சனை நடத்​த​வில்​லை” என தெரிவிக்​கப்​பட்​டிருந்​தது.

இந்த மனுவை நேற்று விசா​ரித்த உயர் நீதி​மன்ற நீதிபதி எம்​.ஜோதி தலை​மையி​லான அமர்​வு, ‘‘மனு​தா​ரரின் வாதத்​தில் உள்ள சட்ட விளக்​கங்​களை ஏற்​று, அரசின் மாத​வி​டாய் விடுப்பு தொடர்​பான உத்​தர​வுக்கு இடைக்​கால தடை விதிக்​கப்​படு​கிறது.

இதுகுறித்து கர்​நாடக அரசு இரு வாரங்​களுக்​குள் எழுத்​துப்​பூர்​வ​மான அறிக்​கையை தாக்​கல் செய்ய‌ வேண்​டும்” எனக் கூறி, வழக்கை தேதி குறிப்​பி​டா​மல்​ ஒத்​திவைத்​தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here