ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் ரூ.1.16 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கத்தை எதிர்த்து மேல்முறையீடு

0
18

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் தனது ரூ.1.16 கோடி சொத்​துகளை அமலாக்​கத் துறை முடக்​கியதை எதிர்த்து காங்​கிரஸ் எம்​.பி. கார்த்தி சிதம்பரம் தாக்​கல் செய்​துள்ள மேல்முறை​யீட்டு மனுவுக்கு அமலாக்​கத்​ துறை 3 வாரங்​களில் பதிலளிக்க உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

கடந்த 2006-ம் ஆண்டு மத்​திய நிதி​யமைச்​ச​ராக ப.சிதம்​பரம் பதவி வகித்​த​போது ஏர்​செல் நிறு​வனத்​தில் வெளி​நாட்டு நிறு​வன​மான மேக்​சிஸ் ரூ.3,500 கோடி வரை முதலீடு செய்ய அந்​நிய முதலீட்டு மேம்​பாட்டு வாரி​யம் அனு​மதி கோரியது.

இதில் ப.சிதம்​பரம் விதி​களுக்கு புறம்​பாக அனு​மதி வழங்​கிய​தாக​வும் இதன்​மூலம் அவரது மகன் கார்த்தி சிதம்​பரத்​தின் நிறு​வனம் பலன் அடைந்​த​தாக​வும் குற்​றச்​சாட்டு எழுந்​தது. இதுதொடர்​பாக ப.சிதம்​பரம், மகன் கார்த்தி சிதம்​பரம் உள்​ளிட்டோருக்கு எதி​ராக சிபிஐ​யும், அமலாக்​கத் துறை​யும் தனித்​தனி​யாக வழக்​குப்​ப​திந்தன.

இந்த வழக்​கில் கார்த்தி சிதம்​பரத்தின் ரூ.1.16 கோடி மதிப்​பு சொத்​துகளை அமலாக்​கத்​துறை கடந்த 2018-ல் முடக்கியது. இந்த நடவடிக்கை சரி​யானது என டெல்​லி​யில் உள்ள அமலாக்​கத்​துறை மேல்​முறை​யீட்டு தீர்ப்​பா​யம் கடந்த ஜூன் 5-ம் தேதி உறுதி செய்து உத்​தர​விட்​டது. இந்த உத்​தரவை எதிர்த்து சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் கார்த்தி சிதம்பரம் மேல்​முறை​யீடு செய்​திருந்​தார்.

அதில், ‘தனக்கு எதி​ராக அமலாக்கத்​துறை கடந்த 2018 ஜூன் 13-ம் தேதி​ தான் சட்​ட​விரோத பணப்​பரி​மாற்ற தடைச் சட்டத்தின்கீழ் வழக்​குப் ​ப​திந்தது ஆனால், அதற்கு முன்​பாக 2018 மார்ச் 12-ம் தேதியே எனது ரூ.1.16 கோடி மதிப்​பிலான சொத்​துகளை முடக்கியது சட்​ட விரோதம் என்​ப​தால் தீர்ப்​பா​ய உத்​தர​வை ரத்து செய்ய கோரி​யிருந்​தார்.

இந்த மனு தலைமை நீதிபதி எம்​.எம்​.ஸ்ரீவஸ்​தவா மற்​றும் நீதிபதி ஜி.அருள்​முரு​கன் ஆகியோர் அடங்​கிய அமர்​வில் நேற்று விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது மனுதாரர் தரப்​பில் வழக்​கறிஞர்கள் விஜய் நாராயணன், என்.ஆர்​.ஆர்​. அருண் நடராஜன் ஆகியோர் ஆஜராகினர். அதையடுத்து நீதிப​தி​கள் இது தொடர்​பாக அமலாக்கத்​துறை 3 வாரங்களில் பதிலளிக்க உத்​தர​விட்டு விசா​ரணையை தள்ளி வைத்​தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here