அடுக்குமாடி குடியிருப்பில் வாக்குச்சாவடி ஏன்? – தேர்தல் ஆணையத்துக்கு முதல்வர் மம்தா கடிதம்

0
21

மேற்கு வங்​கம், தமிழ்​நாடு உள்​ளிட்ட 11 மாநிலங்​களில் வாக்​காளர் பட்​டியல் சிறப்​புத் திருத்​தப் பணி நடை​பெற்று வரு​கிறது. இந்​நிலை​யில் மேற்கு வங்க முதல்​வர் மம்தா பானர்ஜி தலை​மைத் தேர்​தல் ஆணை​யத்​துக்கு நேற்று எழுதிய கடிதத்தில் கூறி​யுள்​ள​தாவது:

மே.வங்​கத்​தில் அவசர அவசர​மாக வாக்​காளர் பட்​டியல் சிறப்​புத் திருத்​தப் பணி நடை​பெற்று வரு​கிறது. வாக்​குச்​சாவடி நிலை அதி​காரி​கள் மீதான அழுத்​தம் காரண​மாக பலர் தற்​கொலை செய்​து​ கொண்​டனர். இந்​நிலை​யில் தற்​போது இந்​தப் பணி​களில் தேர்​தல் ஆணை​யம் மேற்​கொண்​டுள்ள 2 அவசர முடிவு​களுக்கு நான் ஆட்​சேபம் தெரிவிக்​கிறேன். இதை தலை​மைத் தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ் குமாரின் கவனத்​துக்​குக் கொண்டு வரு​கிறேன்.

சிறப்​புத் திருத்​தப் பணி​களில் டேட்டா என்ட்ரி ஆப்​பரேட்​டர்​களையோ அல்​லது வங்க சாஹித்ய கேந்​தி​ரா​விலுள்​ள (பிஎஸ்​கே) ஊழியர்​களையோ பயன்​படுத்த வேண்​டாம் என்று மாவட்ட தேர்​தல் அதி​காரி​களுக்கு (டிஇஓ) மாநில தலை​மைத் தேர்​தல் அதி​காரி (சிஇஓ) உத்​தரவு பிறப்​பித்​துள்​ளார். மேலும் இந்​தப் பணி​களுக்கு ஓராண்டு காலத்​துக்கு 1,000 தனி​யார் டேட்டா என்ட்ரி ஆப்​பரேட்​டர்​களை​யும், 50 சாப்ட்​வேர் இன்​ஜினீயர்​களை​யும் பணி​யில் அமர்த்​து​மாறு உத்​தரவு பிறப்​பித்​துள்​ளார். இது சந்​தேகத்தை எழுப்​புகிறது. ஏன் இந்தப் பணி​களுக்​காக வெளி ஆட்​களைக் கொண்டு வரு​கிறீர்​கள்?

அடுத்ததாக, தனி​யார் குடி​யிருப்பு வளாகங்​களில் வாக்​குச்​சாவடி அமைக்​கலாம் என்று தேர்​தல் ஆணை​யம் பரிசீலித்து வரு​வது ஏன்? இதுதொடர்​பான பரிந்​துரைகளை அனுப்​பு​மாறு மாவட்ட தேர்​தல் அதி​காரி​களுக்கு உத்​தரவு பிறப்​பித்​திருப்​பது ஏன்? இது எங்​களுக்கு 2-வது ஆட்​சேபம்.

தனி​யார் குடி​யிருப்பு வளாகங்​களில் வாக்​குச்​சாவடிகளை அமைப்​பது வாக்​காளர்​களுக்கு பிரச்​சினை​களை உரு​வாக்​கும். அரசு அலு​வல​கங்​கள், பள்​ளி​கள், அரசு கட்​டிடங்​களில் வாக்​குச்​சாவடிகள் அமைப்​பது​தான் நடுநிலைத்​தன்​மை​யை​யும், மக்​கள் அணுகும் வகை​யிலும் இருக்​கும். மாறாக இந்த தனி​யார் குடி​யிருப்பு வளாகங்​களில் வாக்​குச்​சாவடியை அமைப்​பது சரி​யாக வராது. எனவே, இந்த பரிசீலனையை தேர்​தல் ஆணையம் கைவிட​வேண்​டும்.இவ்​வாறு அவர் தெரிவித்​துள்​ளார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here