எஸ்ஐஆர் கண்டித்து விசிக ஆர்ப்பாட்டம்: மறைமுகமாக சிஏஏ கொண்டு வர முயற்சி என குற்றச்சாட்டு

0
32

எஸ்​ஐஆர் என்​பது மறை​முக​மாக குடி​யுரிமை திருத்​தச் சட்​டத்தை கொண்டு வரும் முயற்சி என்​றும், அரசி​யலமைப்பை சிதைப்​பது தான் பாஜக​வின் எண்​ணம் என்​றும் விடுதலை சிறுத்தை கட்சி தலை​வர் திரு​மாவளவன் தெரி​வித்​துள்​ளார்.

எஸ்​ஐஆர்-ஐ கண்​டித்து விசிக சார்​பில் சென்​னை,​எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே நேற்று கண்டன ஆர்ப்​பாட்​டம் நடைபெற்றது. அப்போது விசிக தலைவர் திரு​மாவளவன் பேசி​ய​தாவது: பாஜக உள்​நோக்​கத்​துடன் தான் எஸ்​ஐஆரை கையாள்​கிறது.

பாஜக அரசு அரசி​யல் கட்​சிகளுக்கு நெருக்​கடியை ஏற்​படுத்தி உள்​ளது. விமர்​சனங்​களை செய்து கொண்டே எதிர்க்​கட்​சிகள் இதை நடை​முறைப்​படுத்தி தான் ஆக வேண்​டும் என்​கிற நெருக்​கடியை திட்​ட​மிட்டு ஏற்​படுத்​துகின்​றனர்.

மோடி, அமித் ஷா சராசரி அரசி​யல்​வா​தி​கள் அல்ல. இந்த அதி​காரத்தை பயன்​படுத்தி இந்​தி​யாவை அடியோடு புரட்​டப் பார்க்​கிறார்​கள். எதிர்க்​கட்​சிகளைபலவீனப்​படுத்​து​வது, காங்​கிரஸ், இடது​சா​ரி​கள், திரா​விட கட்​சிகள் இல்​லாத நிலையை உரு​வாக்​கு​வது​தான் பாஜக செயல் திட்​டம். ஜெயலலிதா இருந்​த​போது அதி​முக​வில் பாஜக தலை​யிட முடிய​வில்​லை. இன்று பழனி​சாமி பாஜக​விடம் கைபிசைந்து நிற்​கிறார்.

தேர்​தல் தில்லு முல்லு: முதலில் நீ இந்​திய குடிமகனா என்று உறுதி செய், பிறகு நீ வாக்​காளரா என்று நாங்​கள் உறுதி செய்​கிறோம் என்​பது​தான் எஸ்​ஐஆர் நடவடிக்​கை. குடி​யுரிமை திருத்த சட்​டத்தை தமிழகம் தீவிர​மாக எதிர்த்​தது.

எனவே, மறை​முக​மாக குடி​யுரிமை திருத்த சட்​டத்தை கொண்டு வந்து தேசிய குடிமக்​கள் பெயரேட்டை உரு​வாக்​கவே எஸ்​ஐஆர் தற்​போது அமல்​படுத்​தப்​பட்​டுள்​ளது. தேர்​தல் தில்லு முல்​லுகளை தேர்​தல் ஆணை​யத்​தின் மூலம் செய்து காண்​பிக்​கிறது.

தேர்​தல் ஆணை​ய​மும், பாஜக​வும் ஒரே நிறு​வன​மாக மாறி​யுள்​ளன. இவ்​வாறு அவர் பேசி​னார். ஆர்ப்​பாட்​டத்​தில், ரவிக்​கு​மார் எம்​.பி., எம்​எல்​ஏக்​கள் எஸ்​.எஸ்​.​பாலாஜி, ஆளூர் ஷாந​வாஸ், பனையூர் பாபு, துணை பொது செய​லா​ளர் வன்னி அரசு மற்​றும் 500-க்​கும்​ மேற்​பட்​டோர்​ பங்கேற்றனர்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here