ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத்துக்கு அழுக்கான சிறுநீரகத்தை கொடுத்துவிட்டு அதற்கு பதில் அரசியல் வாய்ப்பையும், பணத்தையும் ரோகிணி ஆச்சார்யா பெற்றதாக அவரது சகோதரர் தேஜஸ்வி தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து ரோகிணி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘‘லாலுவின் பெயரில் போலி அனுதாபம் காட்டுவதை நிறுத்திவிட்டு மருத்துவமனைகளில் உள்ள லட்சக்கணக்கான ஏழை நோயாளிகளுக்கு தங்களது சிறுநீரகங்களை தானம் செய்ய அவர்கள் முன்வர வேண்டும். லாலு மீது அவர்களுக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால், அவர் பெயரில்தான் சிறுநீரங்களை தானம் செய்ய வேண்டும்.
திருமணமான மகள் தனது தந்தைக்கு சிறுநீரகத்தை தானம் செய்ததை விமர்சித்தவர்கள், பொது மேடையில் என்னுடன் வெளிப்படையாக விவாதிக்க தயாரா?. தேஜஸ்வியின் உதவியாளர் சஞ்சய் யாதவ் ‘ஹரியான்வி மகாபுருஷ்’ ஆக செயல்படுகிறார்.
அவரின் ட்ரோல் படைகள் தொடர்ந்து என்னை தாக்குவதில்தான் குறியாக உள்ளன. ஒரு பாட்டில் ரத்தத்தை தானம் செய்ய தயங்குபவர்கள் சிறுநீரக தானத்தை பற்றி விமர்சிக்கிறார்கள்’’ என்றார்.









