பும்ராவை எதிர்கொள்ள தயாராக இருங்கள்: கிரேம் ஸ்மித் அறிவுரை

0
22

இந்தியா – தென் ஆப்​பிரிக்கா அணி​கள் இடையே 2 ஆட்​டங்​கள் கொண்ட டெஸ்ட் கிரிக்​கெட் தொடர் நடை​பெற உள்​ளது. இதன் முதல் போட்டி கொல்​கத்தா ஈடன் கார்​டன் மைதானத்​தில் நாளை (14ம் தேதி) தொடங்​கு​கிறது.

இந்​நிலை​யில் எஸ்​ஏ 20 கிரிக்​கெட் தொடர்​பான நிகழ்ச்சி மும்​பை​யில் நடை​பெற்​றது. இதில் இந்​தத் தொடரின் கமிஷனரும், தென் ஆப்​பிரிக்க அணி​யின் முன்​னாள் கேப்​ட​னு​மான கிரேம் ஸ்மித் பங்​கேற்​றார். அப்​போது அவர், கூறிய​தாவது: துணைக்​ கண்ட ஆடு​களங்​களில் சுழற்​பந்து வீச்சை எதிர்​கொள்​வதற்கு முன்​னரே வேகப்​பந்து வீச்​சுக்கு எதி​ராக விக்​கெட்​களை இழக்க யாரும் விரும்ப மாட்டார்​கள். இந்​தி​யா​வுக்கு எதி​ரான டெஸ்ட் தொடரில் தென்​ ஆப்​பிரிக்க அணி சுழற்பந்து வீச்சை கையாள்​வதற்​கான உத்​தி​களை வகுக்​கும் முயற்​சி​யில் ஈடு​படும் என்று நான் நம்​பு​கிறேன்.

மேலும் பேட்​டிங்கை வலு​வாக தொடங்க வேண்​டும். டாப் 3 வீரர்​கள் சிறந்த அடித்​தளம் அமைத்​துக் கொடுக்க வேண்​டும். தொடக்​கத்​தில் 2 அல்​லது 3 விக்​கெட்​களை இழந்​து​விட்​டால் அதை​விட மோச​மான விஷ​யம் வேறு ஏதும் இருக்​காது. இது நிகழ்ந்​தால் அதன் பின்​னர் சுழற்பந்து வீச்​சாளர்​கள் ஆதிக்​கம் செலுத்​தும் போது நாம் போராட வேண்​டும். தொடக்​கத்​தில் ஜஸ்​பிரீத் பும்​ராவை எதிர்​கொள்​வது பெரிய விஷய​மாக இருக்​கும். இதே​போன்று இந்​திய அணிக்கு எதி​ராக காகிசோ ரபாடா இருப்​பார். இவர்​கள் இரு​வருமே உலகத்​தரம் வாய்ந்த டெஸ்ட் சாதனை​களை கொண்​டுள்ள பந்​து​ வீச்​சாளர்​கள். துணைக்​ கண்ட ஆடு​களங்​கள் ரபா​டாவுக்கு பெரிய சவாலாக இருக்​கும்.

தென் ஆப்​பிரிக்க அணி​யின் பந்​து​வீச்சு தாக்​குதலுக்கு அவர், நிச்​ச​யம் தலை​மை வகிப்​பார். அவர், புதிய பந்​தில் சிறப்​பான தொடக்​கம் அமைத்து கொடுப்​பது தெம்பா பவுமா தலை​மையி​லான அணிக்கு முக்​கி​யத்​து​வம் வாய்ந்​த​தாக அமை​யும். தென் ஆப்​பிரிக்க அணி​யில் உள்ள பல வீரர்​கள் இந்​தியா ‘ஏ’ அணிக்கு எதி​ரான ஆட்​டங்​களி​லும், பாகிஸ்​தான் டெஸ்ட் தொடரிலும் விளை​யாடி உள்​ளார்​கள். ஆடு​களத்​தின் சூழ்​நிலையை தகவ​மைத்​துக் கொண்டு விளை​யாட வேண்​டும். இங்கு விளை​யாடு​வதற்கு அந்த சிந்​தனை முக்​கி​யம். முதல் போட்டி நடை​பெறும் கொல்​கத்தா ஆடு​களம் பொது​வாக ரன் குவிக்க சிறந்த இடம்.

இதனால் ரன்​களுக்​கான மதிப்பை பெற முடி​யும். தென் ஆப்​பிரிக்க அணி சிறந்த பந்​து​வீச்சு தாக்​குதலுடன் இந்​தியா வந்​துள்​ளது. முக்​கிய​மாக சுழற் ​பந்​து​வீச்​சில் கேசவ் மஹா​ராஜ், சைமன் ஹார்​மர் ஆகியோர் நிச்​ச​யம் சேதத்தை ஏற்​படுத்த முடி​யும். அவர்​களால் ஆட்​டத்தை கட்​டுப்​படுத்த முடி​யும், மேலும் விக்​கெட்​களை கைப்​பற்​றக்​கூடிய அளவுக்கு அவர்​கள் பந்தை சுழற்ற முடி​யும். மேலும் ரபாடா ரிவர்​ஸ் ஸ்விங்கை எவ்​வாறு கையாளுகிறார் என்​ப​தை​யும்​ பார்க்​க வேண்​டும்​” இவ்​வாறு கிரேம்​ ஸ்​மித்​ கூறி​னார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here