டெல்லி குண்டு வெடிப்பு சம்பவத்தில், புல்வாமாவைச் சேர்ந்த முஜம்மில், லக்னோவைச் சேர்ந்த ஷாகின், காஷ்மீரின் குல்காமை சேர்ந்த ஆதில், புல்வாமாவைச் சேர்ந்த உமர் நபி, ஹைதராபாதைச் சேர்ந்த அகமது மொஹியுதீன், நகர் மகாராஜா ஹரிசிங் மருத்துவமனை டாக்டர் தஜமுல் ஆகிய 6 மருத்துவர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர். இதில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து என்ஐஏ விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில் இந்த சம்பவத்தில் ஹரியானாவில் உள்ள அல் பலா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவர் நிஸார் உல் ஹசன் தொடர்புள்ளது தெரியவந்துள்ளது. அவர் தற்போது தலைமறைவாக இருக்கிறார்.
தலைமறைவாகியுள்ள அல் பலாஹ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவர் நிஸார் உல் ஹசன், ஏற்கெனவே ஜம்மு-காஷ்மீரில் பணியாற்றியவர் என்பவரும், தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபட்டார் என்பதற்காக அவரை ஜம்மு-காஷ்மீர் துணை நிலை ஆளுநர் 2023-ல் பணிநீக்கம் செய்துள்ளதும் தற்போது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவர் ஸ்ரீநகர் மகாராஜா ஹரிசிங் மருத்துவமனையில் உதவி பேராசிரியராக இருந்தார் என்பதும் தெரியவந்துள்ளது. அவரை நீக்கியது தொடர்பான ஆவணங்களும் தற்போது போலீஸாருக்குக் கிடைத்துள்ளன. அவரை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.














