ஆஸ்திரேலிய ஓபன் பிளே ஆஃப் சுற்றுக்கு விசா பெற சீன தூதரக உதவியை நாடும் சுமித் நாகல்

0
12

சீ​னா​வில் நடை​பெறவுள்ள ஆஸ்​திரேலிய ஓபன் பிளே ஆஃப் போட்​டிக்​குச் செல்​வதற்​காக சீன தூதரகத்​தின் உதவியை இந்​திய டென்​னிஸ் வீரர் சுமித் நாகல் நாடி​யுள்​ளார்.

சீனா​வின் செங்டு நகரில் ஆஸ்​திரேலிய ஓபன் பிளே ஆஃப் சுற்​றுப் போட்​டிகள் நடை​பெறவுள்​ளன. இதற்​காக செங்டு செல்ல விசாவுக்​காக சுமித் நாகல் விண்​ணப்​பித்​திருந்​தார். இந்​நிலை​யில் அவரது விசா விண்​ணப்​பம் எந்​த​வித காரண​மும் இல்​லாமல் நிராகரிக்​கப்​பட்​டுள்​ளது. இதையடுத்து சீன தூதரகத்​தின் உதவியை சுமித் நாகல் நாடி​யுள்​ளார்.

இதுதொடர்​பாக தனது எக்ஸ் சமூக வலை​தளப் பக்​கத்​தில் சுமித் நாகல் வெளி​யிட்​டுள்ள பதி​வில், “சீ​னா​வின் செங்டு நகரில் நடை​பெறவுள்ள ஆஸ்​திரேலிய ஓபன் பிளே ஆஃப் சுற்​றுப் போட்​டி​யில் பங்​கேற்க இருந்​தேன். ஆனால், எனது விசா விண்​ணப்​பம் எவ்​வித காரண​மும் இன்றி நிராகரிக்​கப்​பட்​டுள்​ளது. எனவே, இந்​தி​யா​விலுள்ள சீன தூதரக அதி​காரி​கள் எனக்கு உடனடி​யாக உதவ முன்​வர​வேண்​டும்” என தெரி​வித்​துள்​ளார்.

சுமித் நாகலின் கோரிக்​கைக்கு உடனடி​யாக சீன தூதரகத்​திட​மிருந்து எந்​த​வித பதி​லும் கிடைக்​க​வில்​லை. டென்​னிஸ் தரவரிசை​யில் ஆடவர் ஒற்​றையரில் சுமித் நாகல் 275-வது இடத்​தில் உள்​ளார். முதல் 100 இடங்​களுக்​குள் இல்​லாத​தால் சுமித் நாகல், கிராண்ட்​ஸ்​லாம் போன்ற போட்​டிகளில் நேரடி​யாக பங்​கேற்க முடி​யாது. வைல்ட் கார்டு அல்​லது தகு​திச் சுற்​றுகளின் வாயி​லாகவே போட்​டிக்​குள் நுழைய முடி​யும்.

இதை கருத்​தில் கொண்டே 2026ம் ஆண்டு ஆஸ்​திரேலிய ஓபன் பிர​தான சுற்​றுக்​குள் நுழை​யும் வகை​யில் ஆஸ்​திரேலிய ஓபன் பிளே ஆஃப் போட்​டி​யில் பங்​கேற்க அவர், செங்​டு​வுக்​குச் செல்ல திட்​ட​மிட்​டிருந்​தார். இந்த விவ​காரம் விரை​வாக தீர்க்​கப்​ப​டா​விட்​டால், ஆஸ்​திரேலிய ஓபன் பிளே ஆஃப் சுற்றை சுமித் நாகல் தவற​விட வேண்​டிய சூழ்நிலை ஏற்​படும். இது 2026ம் ஆண்டு சீசனின் முதல் கிராண்ட்​ஸ்​லாம் போட்​டி​யில் நுழைவதற்​கான அவரது வாய்ப்​பு​களைப்​ பா​திக்​கக்​கூடும்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here