ஃபிடே உலகக் கோப்பை செஸ்: தோல்வியில் இருந்து தப்பித்த ஆர்.பிரக்ஞானந்தா

0
15

ஃபிடே உலகக் கோப்பை செஸ் தொடர் கோவா​வில் நடை​பெற்று வரு​கிறது. இந்​தத் தொடரில் முதல் 3 சுற்​றுகள் நிறைவடைந்த நிலை​யில் ஒரு​நாள் ஓய்​வுக்கு பின்​னர் நேற்று 4-வது சுற்​றின் முதல் ஆட்​டங்​கள் நடை​பெற்​றன.

இதில் இந்​தி​யா​வின் ஆர்​.பிரக்​ஞானந்​தா, ஃபிடே​வின் கீழ் பொது வீர​ராக பங்​கேற்​றுள்ள டேனியல் துபோவுடன் பலப்​பரீட்சை நடத்​தி​னார். இதில் 14-வது நகர்​வின் போது ராணி முன்​னால் இருந்த சிப்​பாயை பிரக்​ஞானந்தா கவனக்​குறை​வாக நகர்த்​தி​னார். இந்த நகர்வு டேனியல் துபோவுக்கு வெற்​றியை தேடிக்​கொடுக்​கும் நிலைக்கு கொண்டு செல்​லக்​கூடிய​தாக இருந்​தது.

ஆனால் துர​திருஷ்ட​வச​மாக நேரம் நெருக்​கடி காரண​மாக டேனியல் துபோ இதை கவனிக்​க​வில்​லை. இதனால் பிரக்​ஞானந்தா நிம்​ம​தி​யடைந்​தார். இதன் பின்​னர் 41-வது நகர்த்​தலின் போது ஆட்​டம் டிரா​வில் முடிவடைந்​தது.
மற்​றொரு ஆட்​டத்​தில் இந்​தி​யா​வின் அர்​ஜூன் எரி​கைசி, ஹங்​கேரி​யின் பீட்​டர் லேகோவுடன் மோதி​னார். இந்த ஆட்​டம் 20-வது நகர்த்​தலின் போது டிரா​வில் முடிவடைந்​தது.

பி.ஹரி​கிருஷ்ணா, சுவீடனின் நில்ஸ் கிராண்​டேலியஸுடன் மோதி​னார். இந்த ஆட்​டம் 32-வது நகர்த்​தலின் போதும் வி.​கார்த்திக், வியட்​நாமின் லெ குவாங்லீயம் மோதிய ஆட்​டம் 36-வது நகர்த்​தலின்​ போதும், வி.பிரணவ், உஸ்பெகிஸ் தானின் நோடிர்பெக் யாகுபோவ் மோதிய ஆட்டம் 82-வது நகர்த்தலின் போதும் ​ டிரா ஆனது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here