மியான்மரில் சைபர் மோசடி கும்பலிடம் சிக்கி இருந்த 197 இந்தியர்கள் தாய்லாந்திலிருந்து சிறப்பு விமானம் மூலம் தாயகம் திரும்பினர்

0
12

 தாய்​லாந்து – மியான்​மர் எல்​லை​யில் சைபர் மோசடி மையங்​கள் அதி​கள​வில் உள்​ளன. இங்​கிருந்து சர்​வ​தேச அளவில் அனைத்து வித​மான சைபர் மோசடி சம்​பவங்​கள் நடை​பெறுகின்​றன.

இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களிடம் வெளி​நாட்டு வேலை என கூறி தாய்​லாந்து அழைத்து வரப்​படு​பவர்​களை மியான்​மர் எல்​லை​யில் உள்ள சைபர் மோசடி மையங்​களில் சீனாவை சேர்ந்த கும்​பல் வலுக்​கட்​டாய​மாக பணி​யமர்த்​துகிறது. இந்த கும்​பலிடம் சிக்​கிய​வர்​கள் எளி​தில் தப்​பிக்க முடி​யாது.

இந்​நிலை​யில் சர்​வ​தேச நாடு​கள் கொடுத்த அழுத்​தத்​தையடுத்​து, மியான்​மர் பாது​காப்பு படை​யினர் சைபர் மோசடி மையங்​களில் திடீர் சோதனை நடத்தி அங்கு பணி​யாற்​றும் வெளி​நாட்​டினரை வெளி​யேற்​றும் நடவடிக்​கை​யில் ஈடு​பட்​டனர். அவ்​வாறு வெளி​யேற்​றப்​பட்ட 197 இந்​தி​யர்​கள், தாய்​லாந்து எல்லை நகரான மா சாட்​டுக்​குள் நுழைந்​தனர். இதனால் அவர்​களை தாய்​லாந்து போலீ​ஸார் கைது செய்​தனர்.

இத்​தகவல் இந்​திய தூதரகத்​திடம் தெரிவிக்​கப்​பட்​டதும், கைது செய்​யப்​பட்ட இந்​தி​யர்​களை தாயகம் அழைத்து செல்​வ​தாக இந்​தியா உறு​தி​யளித்​தது. அதன்​படி இந்​திய விமானப்​படை​யின் 2 ஜம்போ விமானங்​கள் தாய்​லாந்​தின் மா சாட் நகருக்கு அனுப்​பப்​பட்​டன. அதில் 197 இந்​தி​யர்​களும் தாயகம் திரும்​பினர்.

இதைப் பார்​வை​யிடு​வதற்​காக தாய்​லாந்து பிரதமர் அனுடின் சர்​வி​ராகுல் மா சாட் நகருக்கு வந்​தார். அவரை தாய்​லாந்​துக்​கான இந்​திய தூதர் நாகேஸ் சிங், மா சாட் விமான நிலை​யத்​தில் சந்​தித்​தார். இந்​திய அரசு துரித​மாக செயல்​பட்​டு, மியான்​மருக்கு கடத்தி வரப்​பட்ட இந்​தி​யர்​களை திரும்ப அழைத்​துக் கொண்​டதை தாய்​லாந்​து பிரதமர்​ பா​ராட்​டி​னார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here