தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி தேடி வரும்: இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஷபாலி வர்மா நம்பிக்கை

0
22

தன்​னம்​பிகை வைத்து செயல்​படும்​போது அதற்​கான வெற்​றிகள் தேடி வரும் என்று இந்​திய மகளிர் அணி கிரிக்​கெட் வீராங்​கனை ஷபாலி வர்மா தெரி​வித்​தார்.

கடந்த வாரம் நடை​பெற்ற மகளிர் உலகக் கோப்பை கிரிக்​கெட் போட்​டி​யில் இந்​திய அணி 52 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் தென் ஆப்​பிரிக்க அணியை வீழ்த்தி முதல் முறை​யாக சாம்​பியன் பட்​டம் வென்​றது. இறு​திச் சுற்​றில் ஷபாலி வர்மா சிறப்​பாக விளை​யாடி 87 ரன்​கள் குவித்து ஆட்​ட​நாயகி விருதை கைப்​பற்​றி​னார். மேலும், பந்​து​வீச்​சின்​போது 2 விக்​கெட்​களைச் சாய்த்து அணியை வெற்​றிக்கு அழைத்​துச் சென்​றார்.

இதுதொடர்​பாக சண்​டிகரில் நேற்று செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: உலகக் கோப்​பையை வென்​றதை எங்​களால் மறக்​கவே முடி​யாது. கடந்த ஓராண்​டாக பல்​வேறு சவால்​களைச் சந்​தித்து அணி​யில் இடம்​பெற்​றேன். கடந்த ஓராண்டு காலம் என்​பது எனக்கு மிகுந்த சவால்​கள் நிறைந்​த​தாகவே இருந்​தது.

பல்​வேறு பிரச்​சினை​களைச் சந்​திக்க நேர்ந்​தது. ஆனால் அந்த சவால்​களை சமாளிக்க போதிய முயற்​சிகளை செய்​தேன். எனது முயற்​சிகளுக்​குக் கிடைத்த பலனாக கடவுள் எனக்கு இறு​திப் போட்​டி​யில் விளை​யாட வாய்ப்பு ஏற்​படுத்​தித் தந்​தார். அரை இறு​திக்கு முன்​ன​தாக இந்​திய அணி​யுடன் நான் இணைந்​த​போது, உலகக் கோப்பை வெற்​றிக்​காக எனது பங்​களிப்பு கண்​டிப்​பாக இருக்​க வேண்​டும் என்று உறுதி செய்து கொண்​டேன்.

இறு​திப் போட்டி என்​பது மிகப்​பெரிய மேடை. தொடக்​கத்​தில் நான் பதற்​ற​மாகவே இருந்​தேன். ஆனால், அதன் பின்​னர் என்னை நான் அமை​திப்​படுத்​திக் கொண்​டு, எங்​களது திட்​டத்தை செயல்​படுத்​தினோம். திட்​டத்தை நாங்​கள் சரி​யாக செயல்​படுத்​தி​ய​தால் கோப்​பையைக் கைப்​பற்​றினோம்.

அணி வீராங்​க​னை​கள் அனை​வரும் திட்​ட​மிட்டு செயல்​பட்டு அதை களத்​தில் பரிசோ​தித்​தோம். அதனால்​தான் கோப்​பையை எங்​களால் வெல்ல முடிந்​தது. இறு​திப் போட்​டி​யில் ஆல்​-ர​வுண்​ட​ராக நான் பரிமளித்​தது மிக​வும் மகிழ்ச்சி அளிக்​கிறது. நான் என்​னுடைய சொந்த ஊரான ரோஹ்​டாக்​குக்கு சென்​ற​போது எனக்கு உற்​சாக வரவேற்பு அளித்​தனர். கடின உழைப்​புக்கு எப்​போதுமே பலன் கிடைக்​கும் என்​பதை நான் உணர்ந்​து​கொண்​டேன். தன்​னம்​பிக்கை வைத்து செயல்​படும்​போது அதற்​கான வெற்​றிகள் தேடி வரும்.

என்​னுடைய ரோல் மாடல் எப்​போதுமே கிரிக்​கெட் ஜாம்​ப​வான் சச்​சின் டெண்​டுல்​கர்​தான். எனது வெற்​றிக்​குக் காரணம் எனது குடும்ப உறுப்​பினர்​கள், பயிற்​சி​யாளர்​கள், அணி வீராங்​க​னை​கள் என்​ப​தில் சந்​தேகமில்​லை.

வெற்​றிக்​குப் பிறகு பிரதமர் மோடியைச் சந்​தித்​தோம். அவரது பாராட்டு எங்​களுக்கு ஊக்​கம் அளித்​தது. சுமார் 2 மணி நேரம் இந்​திய அணி வீராங்​க​னை​களு​டன் அவர் செல​விட்​டார். விரை​வில் ஹரி​யானா முதல்​வர் நயாப் சிங் சைனியை சந்​திக்க உள்​ளேன். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here