ஃபிடே உலகக் கோப்பை செஸ் தொடர் கோவாவில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் நேற்று 3-வது சுற்றின் டை-பிரேக்கர் ஆட்டங்கள் நடைபெற்றன.
டை-பிரேக்கர் சுற்றின் 2-வது ஆட்டத்தில் இந்தியாவின் கார்த்திக் வெங்கட்ராமன், ரொமேனியாவைச் சேர்ந்த கிராண்ட்மாஸ்டர் போக்டான் டேனியல் டீக்குடன் மோதினார். 43-வது நகர்த்தலில் போக்டான் டேனியல் டீக்கை தோற்கடித்தார் கார்த்திக். இதன்மூலம் 4-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார் கார்த்திக் வெங்கட்ராமன்.
3-வது சுற்றின் டை பிரேக்கர் ஆட்டத்தில் இந்திய வீரர் விதித் குஜ்ராத்தி, அமெரிக்க வீரர் சாம் ஷாங்லாண்டிடம் தோல்வி கண்டார். அதேபோல், இந்திய வீரர் எஸ்.எல். நாராயணன், சீன வீரர் யூ யாங்கியிடம் தோல்வி கண்டார்.














