மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ சவுதி அரேபியாவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டார். அவர், ஹஜ் மற்றும் உம்ரா புனித பயணத்துக்கான சவுதி அமைச்சர் தஃபிக் பின் ஃபசான் அல் ராபியாவை ஜெட்டாவில் நேற்று முன்தினம் சந்தித்தார்.
அப்போது அடுத்தாண்டு இந்தியாவில் இருந்து 1,75,025 பேர் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள இருதரப்பு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த சந்திப்பின் போது ஹஜ் புனிதப் பயணத்துக்கான ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.














