அமெரிக்காவில் படித்துவந்த ஆந்திர மாணவி திடீர் மரணம்

0
11

ஆந்​திர மாநிலம், குண்​டூரை அடுத்த பாபட்லா மாவட்​டம், கர்​மசேது எனும் கிராமத்தை சேர்ந்​தவர் ராஜ்யலட்​சுமி எனும் ராஜி (23).

அமெரிக்​கா​வின் டெக்​சாஸ் மாகாணத்​தில் உள்ள ஏ அண்ட் எம் பல்​கலைக்​கழகத்​தில் எம்​எஸ் படித்து வந்​தார். இந்​நிலை​யில் கடந்த 3 நாட்​களாக ராஜி காய்ச்​சல், இரு​மல் மற்​றும் நெஞ்சு வலி​யால் அவதிப்பட்டு வந்​துள்​ளார். 7-ம் தேதி காலை​யில் அவர் படுக்​கை​யில் இருந்து எழாத​தால் தோழிகள் அதிர்ச்சி அடைந்​துள்​ளனர். பின்​னர், ராஜி இரவு தூக்​கத்​திலேயே இறந்து விட்​டதை மருத்​து​வர்​கள் உறுதி செய்​துள்​ளனர். அவரது இறப்​புக்​கான காரணம் குறித்து மருத்​து​வர்​கள் ஆய்வு செய்து வரு​கின்​றனர்.

இதற்​கிடையே ராஜி​யின் மரணம் அவரது குடும்​பத்​தினரை அதிர்ச்சி அடையச் செய்​துள்​ளது. அவரது உடலை ஆந்​திரா கொண்டு வர ஏற்​பாடு நடந்து வரு​கிறது. ராஜி​யின் படிப்​புக்​காக வங்​கிக் கடன் பெற்​றுள்ள அவரது குடும்​பத்​தின் நிலையை தோழிகள் சமூக வலை​தளத்​தில்​ எடுத்​துக்​கூறி நிதி திரட்​டி வரு​கின்​றனர்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here