விரட்டிக்கிட்டே இருக்காம கொஞ்சம் கேப் விடுங்க தலைவரேன்னு ஆலய கட்சி தலைவருக்கு நிர்வாகிங்க கோரஸா கோரிக்கை விடுக்கிறாங்களாம்.. சமீபத்துல நடந்த கட்சியின் மா.செ.க்கள் ஆலோசனை கூட்டத்துல, ‘தேர்தல் நெருங்கிடுச்சு.. அத்தோட எஸ்ஐஆர் வேற வந்துடுச்சு.. அதனால பம்பரமா சுழன்று வேலை பார்க்கணும்’னு தலைமை உத்தரவு போட்டிருக்காம்.
வழக்கமான வோட்டர் லிஸ்ட் சரிபார்ப்பு மாதிரி எஸ்ஐஆர் இல்ல.. ரொம்ப கவனமா, கண்கொத்தி பாம்பா இருக்கணும்னு கறாரா சொல்லிட்டாங்களாம். ஓரணியில தமிழ்நாடு தொடங்கி, கடந்த அஞ்சாறு மாசமா கட்சிப் பணி கனத்துக்கிட்டே இருக்கு.. இதனால குடும்பத்தையும் கவனிக்க முடியல.. தொழிலையும் சரியா செய்ய முடியலன்னு பல பேரு வெளிப்படையாவே புலம்ப ஆரம்பிச்சிட்டாங்களாம்..
இது என்ன சினிமாவா ஆடாம ஜெயிக்க.. இன்னும் அஞ்சாறு மாசம் பொறுத்துக்குங்க.. அடுத்து ஆட்சி அமைஞ்ச பிறகு போதுமான அளவுக்கு ஆசுவாசப்படுத்திக்கலாம் அப்படின்னு மேலிடத்துல இருந்து கூல் பண்ணிக்கிட்டு இருக்காங்களாம்.














