‘கேட்கிறத வாங்கி கொடுத்து உற்சாகப்படுத்துங்க..!’ – உடன்பிறப்புகளுக்கு ‘கல கல’ பாடம் எடுத்த எ.வ.வேலு

0
8

எஸ்​ஐஆர் (SIR) எனும் வாக்​காளர் பட்​டியல் சிறப்​புத் தீவிர திருத்​தப் பணி​கள் தீவிர​மாக நடந்து வரு​கிறது. இதை எப்​படி கையாள்​வது என்று தங்​கள் கட்சி நிர்​வாகி​களுக்கு திமுக​வினர் தனி பாடமே நடத்தி வரு​கின்​ற​னர். இதற்​காக ஊர்​கள் தோறும் சிறப்​புக் கூட்​டங்​கள் நடத்​தப்​படு​கினறன.
அந்த வகை​யில் கள்​ளக்​குறிச்​சி​யிலும் மாவட்ட திமுக நிர்​வாகி​களுக்கு பிரி​யாணி விருந்​துடன் இதற்​கான சிறப்​புக் கூட்​டம் நடந்​தது. மாவட்ட பொறுப்பு அமைச்​ச​ரான எ.வ.வேலு உடன்​பிறப்​பு​களுக்கு எப்​படி தேர்​தல் பணி​யாற்ற வேண்​டும் என்று ஜாலி​யாக பாடம் எடுத்​தார்.

மேடையேறிய உடனே, கட்சி நிர்​வாகி​கள் ஒவ்​வொரு​வரை​யும் பார்த்​து, ‘என்ன பண்​ணி​யிருக்​கே!’ என கேட்​டுக் கொண்டே வந்​தவர், தொகுதி ஒருங்​கிணைப்​பாள​ராக பொறுப்பு வகிக்​கும் கள்​ளக்​குறிச்சி நகர் மன்ற தலை​வரைப் பார்த்​து, “என்ன சுப்​ப​ராயலு, உனக்கு என்ன பொறுப்பு கொடுத்​துருக்​குன்னு தெரி​யு​மா?” என்று கேட்​டபடியே, கூட்​டத்​தில் இருந்த உடன் பிறப்​பு​களைப் பார்த்து பேசத் தொடங்​கி​னார்.

“கொஞ்ச நாளைக்கு நிலம் அளக்​குறது, கல்லு நடுறது, பஞ்​சா​யத்து பண்​றது எல்​லாம் விட்​ருங்​க.. மாமன் கூப்​பிட்​டாரு, மச்​சான் கூப்​பிட்​டாரு, அவங்க கூப்​பிட்டு போய் நிக்​கலைன்னா கோவிச்​சுக்​கு​வாங்​கன்னு சாக்​கு​போக்கு சொல்​றதெல்​லாம் மூட்டை கட்டி வையுங்க. ‘மாமன், மச்​சானுக்கு மிஞ்​சிய உறவுமில்​லை, மயிருக்கு மிஞ்​சிய கருப்​புமில்​லை’ன்னு பழமொழி சொல்​வாங்க. அது சரி​தான்.. ஆனா, அவங்கள அப்​புறம் பார்த்​துக்​குவோம்..

இன்​னும் இரண்டு மாதம் வாக்​காளர் பட்​டியல் திருத்​தப் பணி​யில கவனம் செலுத்​துங்க. ‘வாக்​குச்​சாவடி நிலை அலு​வலர்’ எனும் பிஎல்​ஓவுடன் சேர்ந்து பணி​யாற்​றுகின்ற பிஎல்ஏ2 (அங்​கீகரிக்​கப்​பட்ட கட்​சி​களின் வாக்​குச்​சாவடி முகவர்) இதுல ரொம்ப கவனமா இருக்​கணும்.

முதல்ல பட்​டியல்ல, நம்ம திமுக வாக்​காளர்​கள் இருக்​கி​றாங்​களான்னு பாருங்க; அடுத்து நாம கவனத்​துல எடுத்​துக்க வேண்​டிய ஆளுங்​க.. நம்ம கட்​சி​யில உறுப்​பினரா இருக்க மாட்​டாங்க, ஆனா ஒவ்​வொரு தேர்​தல்​லை​யும் கரெக்டா நமக்கு ஓட்டு போடு​வாங்க, இன்​னும் சில பேரு நம்ம ஆட்சி மேல ஆயிரம் குறை சொல்​லிக்​கிட்டு தேர்​தல்ன்னு வந்தா நமக்கே ஓட்டு போடு​வாங்க.

இவங்​கெல்​லாம் நமக்​கான ஓட்​டு. இவங்க ஓட்டு பட்​டியல்ல இருப்​பதை நாம உறு​திப்​படுத்​தனும். அதுக்கு அப்​புறம் நம்ம தோழமைக் கட்​சிக்​காரங்க ஓட்​டு. இதெல்​லாம் பட்​டியலில் விடு​பட்டு போகாமா கண்​ணும் கருத்​துமா இருக்​க​னும்.

இதைத்​தாண்டி ஒரு குரூப் இருக்​கு, கோணலான சிகையலங்​க​ராத்​தோடு உலா வரு​வாங்​க.. “கடந்த முறை உங்​களுக்​குத் தான் ஓட்டு போட்​டேன்; இந்​த​முறை மாற்றி போடலாம்ன்னு இருக்​கேன்​!”ன்னு சொல்​வாங்க. இப்​படி பேசுறவங்கள கண்​டுக்க வேணாம். நம்​முடனே இருக்​கும் சில பேரு, ‘அவன் என் மச்​சான் மகன், மாமன் மகன்.. நான் திருத்​தி, நம்ம பக்​கம் இழுத்து வர்​றேன்’ சொல்​வாங்க. இதுக்​கெல்​லாம் ‘ரிஸ்க்’ எடுக்​காதீங்க; அவங்​களை திருத்​தவே முடி​யாது.

திமுக என்​பது நன்கு விளைந்த நெற்​ப​யிர். இதில் களை​களை சேர்த்து விட வேண்​டாம். களை எடுக்​கும் தருணம் இது. உன்​னிப்​பாக கவனிச்சி வேலை பாருங்க. முக்​கியமா இந்த களை​களுக்கு பிஎல்ஏ2 (அங்​கீகரிக்​கப்​பட்ட கட்​சி​களின் வாக்​குச்​சாவடி முகவர்) கிடை​யாது. இதை நினை​வில் வச்​சிட்டு வேலை​யைப் பாருங்க.

ரொம்ப முக்​கியமா பிஎல்​ஓவை (வாக்​குச்​சாவடி நிலை அலு​வலர்) மரி​யாதை​யாக நடத்​துங்க. அவங்க என்ன கேக்​குறாங்​களோ அதை வாங்​கிக் கொடுங்க. அவங்கள உற்​சாகப்​படுத்​துங்க; உதவி செய்​யுங்க, இப்​படி​யெல்​லாம் செய்​தால்​தான் வாக்​காளர் பட்​டியலில் நமக்​கான வாக்​காளர்​களை தக்க வைக்க முடியும்” என்​றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here