குழித்துறை அருகே திருத்துவபுரத்தில் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் புதிய ஆட்டோ நிறுத்தம் நேற்று தொடங்கப்பட்டது. குழித்துறை நகர்மன்ற தலைவரும், நகர திமுக முன்னாள் செயலாளருமான பொன் ஆசைத்தம்பி இந்த புதிய ஆட்டோ நிறுத்தத்தை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஆட்டோ சங்க சட்ட ஆலோசகர் ராஜேஷ் குமார், கௌரவத் தலைவர் சுதீர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆட்டோ சங்கத் தலைவர் எம் எஸ் ஸ்டாலின் மற்றும் குழித்துறை நகர்மன்ற உறுப்பினர் அருள்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.














