‘கருப்பு’ படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னையில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் ‘கருப்பு’. இதன் இறுதிகட்ட படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது தெரியாமல் இருந்தது. தற்போது 16 நாட்கள் இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்கப்பட்டுள்ளது. இதில் சூர்யா தவிர்த்து இதர நடிகர்களின் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.
த்ரிஷா, நட்டி, ஆர்.ஜே.பாலாஜி, ஸ்வாசிகா, அனகா மாயா ரவி, இந்திரன்ஸ் உள்ளிட்ட பலர் சூர்யாவுடன் நடித்துள்ளனர். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக ஜி.கே.விஷ்ணு, இசையமைப்பாளராக சாய் அபயங்கர் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். இப்படம் ஜனவரி 23-ம் தேதி வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், படக்குழுவினர் உறுதிப்படுத்தவில்லை.
‘கருப்பு’ படத்தின் பணிகளை முடித்துவிட்டு, வெங்கி அட்லுரி படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சூர்யா. அதனை முடித்துவிட்டு ஜீத்து மாதவன் படத்தில் நடிக்க முடிவு செய்திருக்கிறார். இதன் படப்பிடிப்பு டிசம்பரில் துவங்கும் என தெரிகிறது.














