ஏதென்ஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார். கிரீஸ் நாட்டின் ஏதென்ஸ் நகரில் ஏதென்ஸ் ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வந்தது.
நேற்று நடைபெற்ற இந்தப் போட்டியின் இறுதிச் சுற்றில் ஜோகோவிச் 4-6, 6-3, 7-5 என்ற செட் கணக்கில் இத்தாலி வீரர் லோரென்சோ முசெட்டியை வீழ்த்தி பட்டத்தைக் கைப்பற்றினார். அவர் வெல்லும் 101-வது பட்டமாகும் இது.














