ஹாங்காங் சிக்ஸஸ் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் குவைத் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
ஹாங்காங் நாட்டிலுள்ள மாங்காக்கில் ஹாங்காங் சிக்ஸஸ் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வந்தது. இறுதிப் போட்டியில் பாகிஸ்தான், குவைத் அணிகள் நேற்று மோதின. இதில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி 6 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் குவித்தது.
தொடக்க வீரர் அப்துல் சமத் 13 பந்துகளில் 42 ரன்களும், அப்பாஸ் அப்ரிடி 11 பந்துகளில் 52 ரன்களும் குவித்தனர். இதைத் தொடர்ந்து விளையாடிய குவைத் அணி 5.1 ஓவர்களில் 92 ரன்களுக்கு ஆட்டமிழந்து தோல்வி கண்டது.
பாகிஸ்தான் வீரர் மாஸ் சதாக்கத் 3 விக்கெட்களைச் சாய்த்தார். ஹாங்காங் சிக்ஸஸ் போட்டியில் பாகிஸ்தான் அணி வெல்லும் 6-வது சாம்பியன் பட்டமாகும் இது.














