10 மக்களவைத் தொகுதிகளைக் கணக்குப் போட்டு 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் மாளிகைக் கட்சியிடம் முதல் சுற்றில் 60 தொகுதிகளை கேட்க வேண்டும் என்ற கணக்கில் இருக்கிறதாம் தடாகக் கட்சி. முடிவாக அத்தனை தொகுதிகள் கிடைக்காவிட்டாலும் அப்படி இப்படிப் பேசி 40 தொகுதிகளை கட்டாயம் பெற்றுவிட வேண்டும் என்ற உள் ஒதுக்கீட்டுத் திட்டத்தையும் வைத்திருக்கிறார்களாம்.
அதிலும், 2024 மக்களவைத் தேர்தலில் இரண்டாமிடத்தைப் பிடித்த சட்டமன்றத் தொகுதிகளை கட்டாயம் எங்களுக்கு வேண்டும் எனக் கேட்கிறார்களாம். இதில் கொங்கு மண்டலத்திலும் மாநிலத்தின் தென்கோடியிலும் தடாகக் கட்சி குறித்து வைத்திருக்கும் சில தொகுதிகளால் கூட்டணிக்குள் இழுபறி நீடிக்கலாம் என்கிறார்கள்.
அதிலும் குறிப்பாக, தடாகப் பார்ட்டிகள் குறிவைப்பதில் 9 தொகுதிகள் தங்கள் கட்சியின் முக்கிய தலைகள் போட்டியிடும் தொகுதிகள் என்பதால் அதை தருவதில் தங்களுக்கு இருக்கும் சிரமத்தை மாளிகைக் கட்சி தரப்பில் பதமாக எடுத்துச் சொல்லி இருக்கிறார்களாம்.














