இந்து சமய அறநிலையத் துறை சார்பில் 70 வயதான தம்பதிகளுக்கு சிறப்பு செய்யும் திட்டம்: உதயநிதி தொடங்கி வைக்கிறார்

0
13

இந்து சமய அறநிலை​யத் துறை சார்​பில் 70 வயது பூர்த்​தி​யடைந்த மூத்த தம்​ப​தி​களுக்கு சிறப்பு செய்​யும் திட்​டத்தை துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் இன்று தொடங்கி வைக்​கிறார் என அமைச்​சர் சேகர்​பாபு தெரி​வித்​தார்.

இதுகுறித்து இந்து சமய அறநிலை​யத் துறை அமைச்​சர் பி.கே.சேகர்​பாபு கூறிய​தாவது: கடந்த 2025-26-ம் நிதி​யாண்​டுக்​கான சட்​டப்​பேரவை அறி​விப்​பில், “இந்து சமய அறநிலை​யத்துறை கட்​டுப்​பாட்​டில் உள்ள கோயில்​களில் மணி​விழா கண்ட 70 வயது பூர்த்​தி​யடைந்த ஆன்​மிக ஈடு​பாடு உள்ள 100 தம்​ப​தி​கள் வீதம் 20 இணை ஆணை​யர் மண்​டலங்​களில் 2 ஆயிரம் தம்​ப​தி​களுக்கு கோயில்​கள் சார்​பில் சிறப்பு செய்​யப்​படும்” என அறிவிக்​கப்​பட்​டது.

ரூ.2500 மதிப்பு பொருட்கள்: இந்த அறி​விப்பை செயல்​படுத்​தும் வகை​யில் துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் திரு​வல்​லிக்​கேணி பார்த்​த​சா​ரதி சுவாமி கோயி​லில் சென்னை இணை ஆணை​யர் மண்​டலங்​களைச் சேர்ந்த 70 வயது பூர்த்​தி​யடைந்த 200 மூத்த தம்​ப​தி​களுக்கு சிறப்பு செய்​து, திட்​டத்தை தொடங்கி வைக்​கிறார். தமிழகம் முழு​வதும் இத்​திட்​டத்​தின் கீழ், 2 ஆயிரம் மூத்த தம்​ப​தி​யினர் சிறப்பு செய்​யப்​படு​கின்​றனர். இத்​தம்​ப​தி​யினருக்கு ரூ.2,500 மதிப்​பிலான வேட்டி மற்​றும் சட்​டை, புட​வை, பழ வகைகள், மஞ்​சள், குங்​குமம், கண்​ணாடி வளை​யல் உள்​ளிட்ட மங்​கலப் பொருட்​கள் மற்​றும் சுவாமி படம் ஆகியவை வழங்​கப்​படு​கின்​றன.

குடியிருப்புகள் திறப்பு: அதனைத் தொடர்ந்து துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின், பார்த்​த​சா​ரதி சுவாமி கோயில் சார்​பில் திரு​வல்​லிக்​கேணி, நல்​லதம்பி தெரு​வில் ரூ.2.05 கோடி செல​வில் கட்​டப்​பட்​டுள்ள துணை ஆணை​யர், செயல் அலு​வலர் மற்​றும் கண்​காணிப்​பாளர் குடி​யிருப்​பு​களை​யும், பார்த்​த​சா​ரதி தெரு​வில் ரூ.1.35 கோடி செல​வில் கட்​டப்​பட்​டுள்ள பணி​யாளர் குடி​யிருப்​பை​யும் திறந்து வைக்​கிறார். இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here