குமரி மாவட்டம் அஞ்சுகிராமத்தைச் சேர்ந்த மகேஷ் (34) என்பவரின் மனைவி லேகா (32), கணவர் வீட்டில் தங்கியிருந்து தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். வீட்டு வேலைகளை ஒழுங்காக செய்யவில்லை என்று மாமியார் திட்டியதால் மனமுடைந்த லேகா, வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுதொடர்பாக அஞ்சுகிராமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.














