ம.பி பயிற்சி காவலர்களுக்கு பகவத் கீதை வகுப்பு நடத்த உத்தரவு

0
19

ம.பி.​யில் போலீஸ் பயிற்சி காவலர்​களுக்​கு, ராம்​சரித​மானஸை தொடர்ந்து பகவத் கீதை வகுப்பு நடத்த கூடு​தல் டிஜிபி ராஜா பாபு சிங் உத்​தர​விட்​டுள்​ளார்.

ம.பி.​யில் போலீஸ் காவலர் பணிக்கு புதி​தாக தேர்ந்​தெடுக்​கப்​பட்ட சுமார் 4,000 இளைஞர்​கள் மற்​றும் பெண்​களுக்கு கடந்த ஜூலை முதல் பயிற்சி அளிக்​கப்​படு​கிறது. ம.பி.​யின் 8 பயிற்​சிக் கல்​லூரி​களில் 9 மாதங்​களுக்​கான இந்​தப் பயிற்​சியை கூடு​தல் டிஜிபி (பயிற்​சி) ராஜா பாபு சிங் கடந்த ஜூலை​யில் தொடங்கி வைத்​தார்.

அப்​போது அவர், ‘‘கட​வுள் ராமரின் நற்​பண்​பு​கள் மற்​றும் அவரது 14 ஆண்டு கால வனவாசத்தை விவரிக்​கும் ராம்​சரித​மானஸை பயிற்சி காவலர்​கள் மனப்​பாடம் செய்து ஒப்​பிக்க வேண்​டும். இது ஒழுக்க உணர்வை ஏற்​படுத்​தும்’’ என்​றார்.

இந்​நிலை​யில் பயிற்சி காவலர்​களுக்கு பகவத் கீதை வகுப்பு நடத்த தற்​போது அவர் உத்​தர​விட்​டுள்​ளார். இதுகுறித்து ம.பி.​யின் 8 காவலர் பயிற்சி கல்​லூரி​களின் கண்​காணிப்​பாளர்​களுக்கு அவர் பிறப்​பித்​துள்ள உத்​தர​வில், ‘‘அனைத்து பயிற்சி மையங்​களி​லும் பகவத் கீதை பாராயண அமர்வு நடத்த வேண்​டும். பகவான் கிருஷ்ணரின் தற்​போதைய புனித மாதத்​தில் (அகஹன் கிருஷ்ணா) முடிந்​தால் பகவத் கீதை​யின் ஓர் அத்​தி​யாய​மாவது படிக்க வேண்​டும். தினசரி தியானப் பயிற்​சிக்கு முன் இந்த அமர்வை நடத்​தலாம்.

பகவத் கீதை நமது நித்​திய வேதம். இதை தொடர்ந்து படிப்​பது, நம் பயிற்​சி​யாளர்​கள் நேர்​மை​யான வாழ்க்கை வாழ நிச்​ச​யம் வழி​காட்​டும். மேலும் அவர்​களின் வாழ்க்கை சிறப்​பாக இருக்​கும்’’ என்று கூறி​யுள்​ளார்.

கூடு​தல் டிஜிபி (பயிற்​சி) ராஜா பாபு சிங், 1994-ம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதி​காரி ஆவார். கடந்த 2019-ம் ஆண்டு இவர் குவாலியர் சரக காவல்​துறை அதி​காரி​யாக பணி​யாற்​றி​னார். அப்​போது அவர் இதே​போன்ற பிரச்​சா​ரத்தை தொடங்​கி, உள்​ளூர் சிறைக் கைதி​கள் மற்​றும்​ பிறருக்​கு பகவத்​ கீதை பிர​தி​களை வழங்​கி​னார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here