ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ்: அல்கராஸ், ஜோகோவிச் ஒரே பிரிவில் இடம்பெற்றனர்

0
20

உலக டென்​னிஸ் தரவரிசை​யில் ஆடவர் பிரிவு மற்​றும் இரட்​டையர் பிரி​வில் முதல் 8 இடங்​களில் உள்ள வீரர்​கள் கலந்து கொள்​ளும் ஏடிபி பைனல்ஸ் தொடர் இத்​தாலி​யின் துரின் நகரில் வரும் 9-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை நடை​பெறுகிறது. இந்த தொடருக்​கான டிரா நேற்று அறிவிக்​கப்​பட்​டது.

இதில் ஒற்​றையர் பிரி​வில் கலந்​து​கொள்​ளும் 8 வீரர்​களும் இரு பிரிவுளாக பிரிக்​கப்​பட்​டுள்​ளனர். ஜிம்மி கானர்ஸ் பிரி​வில் ஸ்பெ​யினின் கார்​லோஸ் அல்​க​ராஸ், செர்​பி​யா​வின் நோவக் ஜோகோ​விச், அமெரிக்​கா​வின் டெய்​லர் ஃபிரிட்​ஸ், ஆஸ்​திரேலி​யா​வின் அலெக்ஸ் டி மினார் ஆகியோர் இடம் பெற்​றுள்​ளனர்.

பிஜோர்ன் போர்க் பிரி​வில் நடப்பு சாம்​பிய​னான இத்​தாலி​யின் ஜன்​னிக் சின்​னர், ஜெர்​மனி​யின் அலெக்​ஸாண்​டர் ஜிவேரேவ், அமெரிக்​கா​வின் பென் ஷெல்​டன் ஆகியோர் இடம் பெற்​றுள்​ளனர். இந்த பிரி​வில் கடைசி வீர​ராக இடம் பெறு​வ​தில் கனடா​வின் பெலிக்ஸ் ஆகர்​-அலி​யாசிம், இத்​தாலி​யின் லோரென்சோ முசெட்டி ஆகியோர் இடையே போட்டி நிலவி வரு​கிறது.

தற்​போதைய நிலை​யில் 8-வது இடத்​தில் பெலிக்ஸ் ஆகர்​-அலி​யாசிம் உள்​ளார். ஆனால் இந்த வார இறு​தி​யில் முடிவடை​யும்ஏதன்ஸ் டென்​னிஸ் தொடரில் லோரென்சோ முசெட்டி கோப்​பையை வென்​றால் டென்​னிஸ் தரவரிசை​யில் பெலிக்ஸ் ஆகர்​-அலி​யாசிமை பின்​னுக்​குதள்ளி 8-வது இடத்தை கைப்​பற்​று​வார்.

இரு பிரி​விலும் ரவுண்ட் ராபின் முறை​யில் போட்​டிகள் நடை​பெறும். ஒவ்​வொரு பிரி​விலும் முதல் 2 இடங்​களை பிடிக்​கும் வீரர்​கள் அரை இறு​திக்கு முன்​னேறு​வார்​கள். இறு​திப் போட்​டி 16-ம்​ தேதி நடைபெறுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here