ஆஸி.க்கு எதிரான 4-வது டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி!

0
18

ஆஸ்​திரேலிய அணிக்கு எதி​ரான 4-வது டி20 கிரிக்​கெட் போட்​டி​யில் அக்​சர் படேல், ஷிவம் துபே, வாஷிங்​டன் சுந்​தர் ஆகியோரின் சிறப்பான பந்​து​ வீச்​சால் இந்​திய அணி 48 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றது.

கோல்டு கோஸ்ட் நகரில் உள்ள கர்​ரரா ஓவல் மைதானத்​தில் நேற்று நடை​பெற்ற இந்த ஆட்​டத்​தில் முதலில் பேட் செய்த இந்​திய அணி 20 ஓவர்​களில் 8 விக்​கெட்​கள் இழப்​புக்கு 167 ரன்​கள் எடுத்​தது. அதி​கபட்​ச​மாக ஷுப்​மன் கில் 39 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 4 பவுண்​டரி​களு​டன் 46 ரன்​களும், அபிஷேக் சர்மா 21 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 3 பவுண்​டரி​களு​டன் 28 ரன்​களும் சேர்த்​தனர். ஷிவம் துபே 18 பந்​துகளில் 22 ரன்​கள் எடுத்​தார்.

கேப்​டன் சூர்​யகு​மார் யாதவ் 10 பந்​துகளில், 2 சிக்​ஸர்​களு​டன் 20 ரன்​கள் விளாசிய நிலை​யில் வெளி​யேறி​னார். திலக் வர்மா 5, ஜிதேஷ் சர்மா 3, வாஷிங்​டன் சுந்​தர் 12 ரன்​களில் ஆட்​ட​மிழந்து ஏமாற்​றம் அளித்​தனர். இறு​திக்​கட்​டத்​தில் அக்​சர் படேல் அதிரடி​யாக விளை​யாடி 11 பந்​துகளில், தலா ஒரு சிக்​ஸர், பவுண்​டரி​யுடன் 21 ரன்​கள் விளாசி​னார். ஆஸ்​திரேலிய அணி சார்​பில் நேதன் எலிஸ், ஆடம் ஸாம்பா ஆகியோர் தலா 3 விக்​கெட்​களை வீழ்த்​தினர்.

168 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த ஆஸ்​திரேலிய அணிக்கு மேத்யூ ஷார்ட் அதிரடி தொடக்​கம் கொடுத்​தார். 19 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 2 பவுண்​டரி​களு​டன் 25 ரன்​கள் எடுத்த அவரை அக்​சர் படேல் எல்​பிடபிள்யூ முறை​யில் வெளி​யேற்​றி​னார். இதையடுத்து களமிறங்​கிய ஜோஷ் இங்​லிஷை 12 ரன்​களில் போல்​டாக்கி பெவிலியனுக்கு திருப்​பி​னார் அக்​சர் படேல். இதன் பின்​னர் ஆஸ்​திரேலிய அணி ஆட்​டம்
கண்​டது.

கேப்​டன் மிட்​செல் மார்ஷ் 24 பந்​துகளில், 4 பவுண்​டரி​களு​டன் 30 ரன்​கள் எடுத்த நிலை​யில் ஷிவம் துபே பந்தை விளாச முயன்ற போது பேக்​வேர்டு ஸ்கொயர் திசை​யில் அர்​ஷ்தீப் சிங்​கிடம் கேட்ச் ஆனது. ஒரு கட்​டத்​தில் ஆஸ்​திரேலிய அணி 11 ஓவர்​களில் 3 விக்​கெட்​கள் இழப்​புக்கு 88 ரன்​கள் சேர்த்து வலு​வாகவே இருந்​தது. ஆனால் மேற்​கொண்டு 31 ரன்​களை சேர்ப்​ப​தற்​குள் எஞ்​சிய 7 விக்​கெட்​களை​யும் கொத்​தாக தாரை​வார்த்​தது.

தனது அடுத்த ஓவரில் அதிரடி வீர​ரான டிம் டேவிட்​டை​யும் (14 ரன்​கள்) ஆட்​ட​மிழக்​கச் செய்து அசத்​தி​னார் ஷிவம் துபே. இதையடுத்து களமிறங்​கிய ஜோஷ் பிலிப் 10 ரன்​களில் அர்​ஷ்தீப் சிங் பந்​தில் நடையை கட்​டி​னார். மிக​வும் எதிர்​பார்க்​கப்​பட்ட கிளென் மேக்​ஸ்​வெல் 2 ரன்​களில் வருண் சக்​ர​வர்த்தி பந்​தில் போல்​டா​னார். மார்​கஸ் ஸ்டாய்​னிஸ் 19 பந்​துகளில், 17 ரன்​கள் எடுத்த நிலை​யில் வாஷிங்​டன் சுந்​தர் பந்​தில் எல்​பிடபிள்யூ ஆனார்.

பென் டுவார்​ஷு​யிஸ் 5 ரன்​களில் பும்ரா பந்​தில் போல்​டா​னார். சேவியர் பார்ட்​லெட் (0), ஆடம் ஸம்பா (0) ஆகியோர் வாஷிங்​டன் சுந்​தர் பந்​தில் நடையை கட்ட ஆஸ்​திரேலிய அணி 18.2 ஓவர்​களில் 119 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. நேதன் எலிஸ் 2 ரன்​களு​டன் களத்​தில் இருந்​தார். இந்​திய அணி தரப்​பில் வாஷிங்​டன் சுந்​தர் 1.2 ஓவர்​களை வீசி 3 ரன்​களை விட்​டுக்​கொடுத்து 3 விக்​கெட்​களை வீழ்த்​தி​னார்.

அக்​சர் படேல் 4 ஓவர்​களை வீசி 20 ரன்​களை வழங்கி 2 விக்​கெட்​கள் கைப்​பற்​றி​னார். அவர், 12 டாட்​பால்​களை வீசி ஆஸ்​திரேலிய அணிக்கு அழுத்​தம் கொடுத்​திருந்​தார். ஷிவம் துபே 2 ஓவர்​களை வீசி 20 ரன்​களை விட்​டுக்​கொடுத்து 2 விக்​கெட்​கள் வீழ்த்​தி​னார். அர்​ஷ்தீப் சிங், ஜஸ்​பிரீத் பும்​ரா, வருண் சக்​ர​வர்த்தி ஆகியோர் தலா ஒரு விக்​கெட் கைப்​பற்​றினர். ஆட்ட நாயக​னாக அக்​சர் படேல் தேர்​வா​னார்.

48 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற இந்​திய அணி 5 ஆட்​டங்​கள் கொண்ட டி 20 தொடரில் 2-1 என முன்​னிலை வகிக்​கிறது. முதல் ஆட்​டம் மழை​யால் கைவிடப்​பட்​டிருந்​தது. 2-வது ஆட்​டத்​தில் ஆஸ்​திரேலிய அணி 4 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றிருந்​தது. 3-வது ஆட்​டத்​தில் இந்​திய அணி 5 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி கண்​டிருந்​தது. கடைசி மற்​றும் 5-வது போட்டி நாளை (8-ம் தேதி) பிரிஸ்​பனில்​ உள்​ள ​கா​பா மை​தானத்​தில்​ நடைபெறுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here