பிஹாரில் முதல்கட்ட தேர்தல் நேற்று நடந்தது. இதில் முன்னாள் முதல்வரும் ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் நேற்று பாட்னாவில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் தனது மனைவி ராப்ரி தேவி, மகனும் முதல்வர் வேட்பாளருமான தேஜஸ்வி யாதவ் ஆகியோருடன் சென்று வாக்களித்தார்.
இது தொடர்பான புகைப்படத்தை ‘எக்ஸ்’ தளத்தில் அவர் பகிர்ந்து கொண்டுள்ளார். இதில், “தவாவில் உள்ள ரொட்டியை புரட்டிப்போட வேண்டும். இல்லாவிடில் அது கருகிவிடும். 20 ஆண்டுகள் என்பது (நிதிஷ் குமாரின் ஆட்சி) மிகவும் நீண்டது. புதிய பிஹாரை உருவாக்க தற்போது தேஜஸ்வி தலைமையில் அரசு அமைவது அவசியம்” என்று குறிப்பிட்டுள்ளார்.














