மிட்செல் சாண்ட்னர் போராட்டம் வீண்: டி20-ல் நியூஸிலாந்தை வீழ்த்தியது மே.இ.தீவுகள்

0
19

 நியூஸிலாந்து – மேற்கு இந்​தி​யத் தீவு​கள் இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி நேற்று ஆக்​லாந்​தில் உள்ள ஈடன் பார்க் மைதானத்​தில் நடை​பெற்​றது. முதலில் பேட் செய்த மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி 20 ஓவர்​களில் 6 விக்​கெட்​கள் இழப்​புக்கு 164 ரன்​கள் எடுத்​தது.

அதி​கபட்​ச​மாக கேப்​டன் ஷாய் ஹோப் 39 பந்​துகளில், 3 சிக்​ஸர்​கள், 4 பவுண்​டரி​களு​டன் 53 ரன்கள் விளாசினார். ரோவ்​மன் பவல் 33, ராஸ்​டன் சேஸ் 28, அலிக் அதானஸ் 16 ரன்​கள் சேர்த்​தனர்.

165 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த நியூஸிலாந்து அணி 16.4 ஓவர்​களில் 107 ரன்​களுக்கு 9 விக்​கெட்​களை இழந்து தோல்​வி​யின் பிடி​யில் சிக்​கியது. டிம் ராபின்​சன் 27, டேவன் கான்வே 13, ரச்​சின் ரவீந்​திரா 21, மார்க் சாப்​மேன் 7, டேரில் மிட்​செல் 13, மைக்​கேல் பிரேஸ்​வெல் 1, ஜேம்ஸ் நீஷாம் 11, சாக் ஃபோல்க்ஸ் 1, கைல் ஜேமிசன் 2 ரன்​களில் ஆட்​ட​மிழந்​தனர்.

கைவசம் ஒரு விக்​கெட் மட்​டுமே இருந்த நிலை​யில் வெற்​றிக்கு 20 பந்​துகளில், 58 ரன்​கள் தேவை என்ற நிலை​யில் கேப்​டன் மிட்​செல் சாண்ட்​னர் போராடி​னார். மேத்யூ ஃபோர்டு வீசிய 18-வது ஓவரில் 4 பவுண்டரி​கள், ஒரு சிக்​ஸரை​யும் ஜேசன் ஹோல்​டர் வீசிய அடுத்த ஓவரின் முதல் 3 பந்​துகளை​யும் பவுண்​டரிக்கு விரட்டி அசத்​தி​னார் மிட்​செல் சாண்ட்​னர்.

அதிரடி​யாக விளை​யாடிய மிட்​செல் சாண்ட்​னர் 28 பந்​துகளில், சிக்​ஸர்​கள், 8 பவுண்​டரி​களு​டன் 55 ரன்​கள் சேர்த்த போதி​லும் வெற்​றியை வசப்​படுத்த முடி​யாமல் போனது. முடி​வில் 20 ஓவர்​களில் நியூஸிலாந்து அணி 9 விக்​கெட்​கள் இழப்​புக்கு 157 ரன்​கள் எடுத்து தோல்வி அடைந்​தது. ரோமாரியோ ஷெப்​பர்டு வீசிய கடைசி ஓவரில் நியூஸிலாந்து அணி​யின் வெற்​றிக்கு 20 ரன்​கள் தேவை​யாக இருந்​தன. முதல் 2 பந்​துகளில் ரன்​கள் சேர்க்​காத சாண்ட்​னர், கடைசி 4 பந்​துகளில் 12 ரன்​கள் சேர்த்​தார். இதில் தலா ஒரு சிக்​ஸர், பவுண்​டரி அடங்​கும்.

ஒரு கட்​டத்​தில் நியூஸிலாந்து அணி 10 ஓவர்​களில் 2 விக்​கெட்​கள் இழப்​புக்கு 70 ரன்​கள் சேர்த்து வலு​வாகவே இருந்​தது. ஆனால் மேற்கொண்டு 37 ரன்​களை எடுப்​ப​தற்​குள் 7 விக்​கெட்​களை கொத்​தாக தாரை​வார்த்​தது. இதுவே அந்த அணி​யின் வீழ்ச்​சிக்கு முக்​கிய காரண​மாக அமைந்​தது.

மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி சார்​பில் ஜெய்​டன் சீல்​ஸ், ராஸ்​டன் சேஸ் ஆகியோர் தலா 3 விக்​கெட்​களை வீழ்த்​தினர். 7 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி 5 ஆட்​டங்​கள் கொண்ட டி 20 தொடரில் 1-0 என முன்​னிலை வகிக்​கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here