ஆந்திராவில் பத்திரப்பதிவு அலுவலகங்களில் அதிக லஞ்சம் வாங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து, நேற்று ஒரே நேரத்தில் என்.டி.ஆர் மாவட்ட இப்ரஹிம்பட்டினம், பிரகாசம் மாவட்டம் ஓங்கோல், விஜயநகரம் மாவட்டம் போகாபுரம், சத்யசாய் மாவட்டம் சிலமத்தூரு, பல்நாடு மாவட்டம் நரசராவ் பேட்டா, திருப்பதி மாவட்டம் ரேணிகுண்டா உட்பட பல மாவட்டங்களில் 120 பத்திரப்பதிவு மற்றும் துணை பத்திரப்பதிவு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினர்.














