மினி பேருந்து திட்டத்துக்கு தடை விதிக்க நீதிபதிகள் மறுப்பு

0
21

தமிழக அரசின் விரி​வான மினி பேருந்து திட்​டத்​துக்கு தடை விதிக்க மறுத்த நீதிப​தி​கள், 1,350 தனி​யார் பேருந்​துகளுக்கு வழங்​கப்​பட்ட உரிமம் இந்த மேல்​ முறை​யீட்டு வழக்​கின் இறுதி தீர்ப்​புக்கு கட்​டுப்​பட்​டது என உத்​தர​விட்​டுள்​ளனர்.

பேருந்து வசதி​ இல்​லாத சிறிய கிராமங்​களுக்​கும் போக்​கு​வரத்து சேவையை விரிவுபடுத்​தும் வகை​யில் தமிழக அரசு புதிய விரி​வான மினி பேருந்து திட்​டத்தை கடந்​தாண்டு அறி​வித்​தது. அதன்​படி தனி​யார் மினி பேருந்​துகள் 25 கிமீ தூரம் வரை செல்ல உரிமம் வழங்​கப்​படும்.

தமிழகம் முழு​வதும் புதி​தாக 3,103 மினி பேருந்து வழித்​தடங்​கள் உரு​வாக்​கப்​பட்டு சுமார் 90 ஆயிரம் கிராமங்​களில் வசிக்​கும் 1 கோடி மக்​கள் பயனடை​யும் நோக்​கில் கொண்டு வரப்​பட்ட இத்​திட்​டத்​தில் சில திருத்​தங்​கள் செய்து கடந்த ஏப்​.28 அன்று அரசாணை வெளி​யிடப்​பட்​டது.

இதை எதிர்த்து தனி​யார் பேருந்து உரிமை​யாளர்​கள் மற்​றும் தனி​நபர்​கள் சார்​பில் உயர் நீதி​மன்​றத்​தில் வழக்​கு​கள் தொடரப்​பட்​டன. இந்த வழக்​கு​களை ஏற்​கெனவே விசா​ரித்த தனி நீதிப​தி, குக் கிராமங்​களுக்​கும் எளி​தான போக்​கு​வரத்து வசதி கிடைக்க வேண்​டுமென்ற எண்​ணத்​தில் அரசு இந்த திட்​டத்தை அறிவித்​துள்​ளது.

பேருந்து உள்​ளிட்ட அடிப்படை வசதி​களை பெறு​வது மக்​களின் அடிப்​படை உரிமை. அரசின் கொள்கை முடி​வில் தலை​யிட முடி​யாது எனக்​கூறி வழக்கை தனி நீதிபதி தள்​ளு​படி செய்தார்.இதை எதிர்த்து மேல்​முறையீடு செய்​யப்​பட்​டது இந்த வழக்கு நீதிபதி​கள் ஆர்​.சுரேஷ்கு​மார், ஹேமந்த் சந்​தன் கவுடர் அடங்​கிய அமர்​வில் நேற்று விசா​ரணைக்கு வந்​தது.

அப்​போது தமிழக அரசின் தலைமை வழக்​கறிஞர் பி.எஸ்​.​ராமன், ‘ஏற்​கெனவே இந்த திட்​டம் அமலுக்கு வந்​து​விட்​டதாக தெரிவித்தார். அதைப்​ப​திவு செய்து கொண்ட நீதிபதி​கள், இந்த வழக்​கில் தடை​யுத்​தரவு பிறப்பிக்க முடி​யாது. அதே நேரம், 1,350 தனி​யார் மினி பேருந்​துகளுக்கு அரசு உரிமம் வழங்​கியது வழக்​கின் இறுதி தீர்ப்​புக்கு கட்​டுப்​பட்​டது எனக்​கூறி விசா​ரணையை ஜன.3-வது வாரத்​துக்கு தள்​ளி​வைத்​தனர்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here