மங்களூரு பாட்மிண்டனில் தங்கம் வென்றார் ரித்விக்

0
22

கர்​நாடக மாநிலம் மங்​களூருவில் மங்​களூரு சேலஞ்ச் பாட்​மிண்​டன் தொடர் நடை​பெற்​றது. இதில் ஆடவர் ஒற்​றையர் பிரிவு இறு​திப் போட்​டி​யில் உலகத் தரவரிசை​யில் 60-வது இடத்​தில் உள்ள இந்​தி​யா​வின் ரித்விக் சஞ்​ஜீ​வி, சகநாட்​டைச் சேர்ந்த ரூனக் சவு​கானுடன் மோதி​னார். இதில் ரித்விக் 14-21, 21-19, 21-19 என்ற செட் கணக்​கில் வெற்றி பெற்று தங்​கப் பதக்​கம் வென்​றார். தமிழகத்​தைச் சேர்ந்த ரித்விக் சஞ்​ஜீவி ஹட்​சன் பாட்​மிண்​டன் அகாட​மி​யில் பயிற்சி பெற்று வரு​கிறார்​.

தென் ஆப்பிரிக்க அணி 263 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

பைசலாபாத்: தென் ஆப்பிரிக்கா – பாகிஸ்தான் அணிகள் இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி பைசலாபாத் நகரில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 49.1 ஓவர்களில் 263 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக குயிண்டன் டி காக் 71 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 63 ரன்களும், லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ் 60 பந்துகளில், ஒரு சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 57 ரன்களும் சேர்த்தனர். பாகிஸ்தான் அணி சார்பில் நசீம் ஷா, அப்ரார் அகமது ஆகியோர் தலா 3 விக்கெட்களையும், சைம் அயூப் 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். இதையடுத்து 264 ரன்கள் இலக்குடன் பாகிஸ்தான் பேட் செய்யத் தொடங்கியது.

டபிள்யூடிஏ பைனல்ஸ் தொடர்: அரை இறுதியில் ரைபகினா

சவுதி அரேபியாவில் உள்ள ரியாத் நகரில் டபிள்யூடிஏ பைனல்ஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் உலகத் தரவரிசையில் முதல் 8 இடங்களில் உள்ள டென்னிஸ் வீராங்கனைகள் கலந்து கொண்டு இரு பிரிவுகளாக ரவுண்ட் ராபின் முறையில் விளையாடி வருகின்றனர். செரீனா வில்லியம்ஸ் குரூப்பில் இடம் பெற்றுள்ள 6-ம் நிலை வீராங்கனையான கஜகஸ்தானின் எலெனா ரைபகினா தனது 2-வது ஆட்டத்தில் நேற்று போலந்தின் இகா ஸ்வியாடெக்குடன் மோதினார். இதில் ரைபகினா 3-6, 6-1, 6-0 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறினார். டபிள்யூடிஏ பைனல்ஸ் தொடரில் ரைபகினா அரை இறுதியில் கால்பதிப்பது இதுவே முதன்முறையாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here