சத்தீஸ்கர் மாநிலத்தின் பிலாஸ்பூர் -கத்னி வழித்தடத்தில் லால் காதன் என்ற பகுதியில் சரக்கு ரயில் ஒன்று நேற்று மாலை நின்று கொண்டிருந்தது.
அதே வழித்தடத்தில் பிலாஸ்பூர் செல்லும் புறநகர் மின்சார ரயிலும் வந்தது. வேகமாக வந்த மின்சார ரயில், நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது பயங்கரமாக மோதியது. இதில் 8 பயணிகள் உயிரிழந்தனர். 14 பேர் காயமடைந்தனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
ரயில் விபத்தில் உயிரிழந்தவர் களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்ச மும், படுகாயம் அடைந்தோருக்கு ரூ.5 லட்சமும், லேசான காயம் அடைந்தோருக்கு ரூ.1 லட்சமும் நிவாரணமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.














