பின்தொடர்வோரை அதிகரிக்க இந்து கடவுள்களுக்கு எதிராக அவதூறு ‘ரீல்ஸ்’ வெளியிட்ட சிறுமி: பெற்றோருக்கு சிறை 

0
14

இன்​ஸ்​டாகி​ராமில் இந்து கடவுள்​களுக்கு எதி​ரான ஓர் அவதூறு வீடியோ கடந்த 27-ம் தேதி வெளி​யானது. மைனர் பெண் ஒரு​வர் வெளி​யிட்ட அந்த ஒரு நிமிட வீடியோவில் இடம்பெற்ற இந்து கடவுள்​களுக்கு எதி​ரான கருத்​துக்கு பலர் ஆட்​சேபம் தெரி​வித்​தனர்.

அந்த மைனர் பெண் மற்​றும் அவரது குடும்​பத்​துக்கு எதி​ராக இந்து அமைப்​பு​கள் போராட்​டம் நடத்​தின. காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தன. இதன் அடிப்​படை​யில் மைனர் பெண்ணை உ.பி. போலீ​ஸார் தடுப்பு காவல் இல்​லத்​தில் வைத்​தனர். அவரது பெற்​றோரை கைது செய்து சிறை​யில் அடைத்​தனர்.

இதுகுறித்து போலீஸ் அதி​காரி ஒரு​வர் கூறுகை​யில், “இந்து கடவுள்​களுக்கு எதி​ரான கருத்து அந்த வீடியோ​வில் இருப்​பது பெற்​றோருக்கு தெரிந்​த​போ​தி​லும் அவர்​கள் அதை தடுக்​கத் தவறி விட்​டனர்.

இன்​ஸ்​டாகி​ராமில் பார்​வை​யாளர்​கள் மற்​றும் பின்​தொடர்​வோரை அதி​கரிக்க அச்​சிறுமி இவ்​வாறு செய்​துள்​ளார். அந்த வீடியோவை யாரும் பகிர்ந்​து​கொள்ள வேண்​டாம். மீறி​னால் அவர்​கள் மீது கடும் நடவடிக்கை எடுக்​கப்​படும். இந்த வழக்​கில் தொடர்​புடைய மேலும் ஒரு​வரை தேடி வரு​கிறோம்’’ என்​றார். இந்​நிலை​யில் மைனர் பெண்தனது தவறை ஒப்​புக்​கொண்டு மன்​னிப்பு கோரும் மற்​றொரு வீடியோ​வும் வெளி​யாகிள்​ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here