மாளிகைக் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட அந்த ’கோட்டை’ எக்ஸ் மாண்புமிகுவுக்கு, செய்தி சொல்லும் துறையில் இருந்து ஓய்வுபெற்ற உதவி இயக்குநர் (ஏடி) அந்தஸ்திலான ஒருவர் தான் இப்போது முக்கிய அரசியல் ஆலோசனைகளை வழங்கி வருகிறாராம். அவரது ஆலோசனைகளை தட்டாமல் ஏற்றுக் கொள்ளும் எக்ஸ் மாண்புமிகு, பசும்பொன்னுக்கு ‘பலே’ பங்காளிகளுடன் சேர்ந்து பயணப்படுவதற்கு முன்னதாகவும் ஏடியிடம் ஆலோசனை கேட்டாராம்.
“இப்போதைக்கு இது வேண்டாமே” என ஏடி ஏர்பிரேக் போட்டாராம். ஆனால், “டெல்லி சொல்லாத எதையும் நான் செய்யமாட்டேன். ஆனா, தேவர் ஜெயந்திக்கு இந்த ரூட்டில் இன்னின்னாருடன் போங்கன்னு டெல்லிலருந்து சொல்றாங்களே… நான் என்ன செய்ய?” என்று அப்பாவியாய் கேட்ட எக்ஸ் மாண்புமிகு, “டிசம்பர் கடைசி வரைக்கும் நாங்கள் என்ன சொல்றோமோ அதை தட்டாம செய்யுங்கன்னு அவங்க சொல்றாங்க சார். அவங்க சொல்லாத எதையும் செய்யவும் மாட்டேன்; அவங்க சொல்றத செய்யாம இருக்கவும் மாட்டேன்” என்று சொன்னாராம்.













