‘ஷோ’ காட்டத் தயாராகும் சோஷியல் மீடியா வாரியர்ஸ் – கோடிகளைக் கொட்டும் அரசியல் கட்சிகள்

0
18

தமி​ழ​கத்​தில் 2026 சட்​டப்​பேர​வைத் தேர்​தலுக்​கு, முன்​னெப்​போதும் இல்​லாத வகை​யில் கிட்​டத்​தட்ட ஓராண்​டுக்கு முன்​பிருந்தே முக்​கிய கட்​சிகள் ஆயத்​தப் பணி​களை தொடங்​கி​விட்​டன. தற்​போது, சமூக வலை​தளங்​கள் வழியே பிரச்​சா​ரம் செய்​ய​வும், செய்​தி​களை பரப்​ப​வும், விவாதங்​களில் ஈடு​பட​வும் அனைத்​துக் கட்​சி​களின் ஐடி விங்​கு​களும் பரபரப்​பாக செயல்​பட்டு வரு​கின்​றன.

திமுக, அதி​முக, பாஜக உள்​ளிட்ட பிர​தானக் கட்​சிகள் ஐடி விங் ஆலோ​சனைக் கூட்​டங்​களை அடிக்​கடி நடத்​துகின்​றன. ‘தமிழ்​நாட்டை தலை​குனிய விட​மாட்​டேன்’, ‘ஓரணி​யில் தமிழ்​நாடு’ என திமுக ஐடி விங் சமூக வலைதள பரப்​புரை மேற்​கொண்டு வரு​கிறது. எதிர்க்​கட்​சி​யான அதி​முக ஐடி விங் சார்​பில் ‘உருட்​டுக் கடை அல்​வா’ என நேரம் பார்த்து கோல் போடு​கின்​ற​னர். நடு​வில், தவெக​வின் விர்ச்​சுவல் வாரியர்ஸ் செய்​யும் அலப்​பறை​களும் தூள் பறக்​கின்​றன. சீமானின் தம்​பிகளும் தங்​கள் பங்​குக்கு கருத்​துகளை தெறிக்​க​விடு​கின்​ற​னர்.

முக்​கிய​மாக, எக்​ஸ், இன்​ஸ்​டாகி​ராம், ஃபேஸ்​புக் உள்​ளிட்ட தளங்​களில் இயங்​கும் அரசி​யல் கட்​சித் தலை​வர்​களின் தனிக் கணக்​கில் பதி​விடும் கருத்​துகளுக்​கு, கமென்ட் பக்​கத்​தில் ஆதரிப்​பது, எதிர்​வினை ஆற்​று​வது, விவாதம் செய்​வது என கட்​சி​களின் ஐடி விங் நிர்​வாகி​கள் மற்​றும் ஆதர​வாளர்​கள் தூக்​கத்தை மறந்து சுழல்​கி​றார்​கள். மேலும், எக்ஸ் பக்​கத்​தில் தங்​கள் கட்சி தலை​வர் பேசும் கருத்​துகளை​யும், கட்​சி​யை​யும் ஹேஸ்​டேக் மூலம் டிரெண்​டிங்​கில் வைத்​திருப்​பதும் ஐடி விங்​கு​களின் பிர​தான வேலை​யாக உள்​ளது.

தற்​போது ரீல்ஸ் மோகம் அதி​கரித்​துள்​ள​தால், அதற்கு ஏற்​ற​வாறும் 30 விநாடி ஷார்ட்ஸ் வீடியோக்​களாக தயா​ரித்து அதை​யும் சுற்ற விடு​கி​றார்​கள். இதே​போல, சமூக வலை​தளங்​களில் அதி​களவு ஃபாலோவர்ஸ் வைத்​துள்ள சோஷியல் மீடியா இன்​புளுயன்​சர்​களை​யும் அரசி​யல் கட்​சிகள் அணுகி வரு​கின்​ற​னர். ஒரு நாளைக்கு இத்​தனை வீடியோ பதிவு செய்ய வேண்​டும், அதை தங்​கள் பக்​கங்​களு​டன் ‘கொலாப்’ (Colab) செய்ய வேண்​டும், அதிக பார்​வை​யாளர்​களை ஈர்க்க வேண்​டும், சொல்​லும் கருத்தை பதி​விட வேண்​டும், வீடியோக்​களை வெளி​யிட வேண்​டும் என ஒப்​பந்​தங்​கள் போடப்​பட்டு காரி​யங்​கள் நடக்​கின்​றன.

ஒரு வீடியோவுக்கு இவ்​வளவு ரூபாய், வீடியோ சென்று சேரும் பார்​வை​களைப் பொருத்து இவ்​வளவு ரூபாய் என இதர டீல்​களும் நடக்​கின்​றன. இதைக் கணக்​குப் போட்டு இன்​புளுயன்​சர்​களும் தேர்​தலை மையப்​படுத்​தி, தற்​போதே தங்​கள் சமூக வலைதள கணக்​கு​களில் அரசி​யல் சார்ந்த வீடியோக்​களை பதி​விட்டு வரு​கின்​ற​னர்.

இதே​போல் தேர்​தலுக்​காக புதிது புதி​தாய் ஏஜென்​ஸிகளும் முளைத்து வரு​கின்​றன. இந்த ஏஜென்​ஸிகள் அரசி​யல் கட்​சிகளை அணுகி, அரசி​யல் திட்டங்​கள் வகுப்​பது, வெற்றி வாய்ப்​பு, உள்​ளூர் நில​வரம், கள நில​வரம், யூடியூப் லைவ், சமூக வலை​தளங்​களில் பதிவு என பேக்​கேஜ் பேசும் பணி​களும் தீவிரமடைந்​துள்​ளன.

சமூக வலை​தளங்​களின் வீரி​யத்தை உணர்ந்​திருக்​கும் முக்​கிய அரசி​யல் கட்​சிகள் இந்​தத் தேர்​தலுக்கு முன்​னெப்​போதும் இல்​லாத வகை​யில் அந்த ரூட்​டுக்​கும் கொஞ்​சம் கோடிகளை திருப்​பத் தயா​ராகி வருகின்​றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here